Pages

Tuesday, July 12, 2016

அதிரை பேருந்து நிலையத்தில் எஸ்டிபிஐ கட்சி நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம் !

அதிராம்பட்டினம், ஜூலை 12
பிரபல இஸ்லாமிய மார்க்க பிராச்சாரகர் டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களை தீவிரவாதத்தோடு இணைத்து மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா அரசு மேற்கொண்டு வரும் மதத்தூவேச நடவடிக்கையை கண்டித்து எஸ்டிபிஐ கட்சி தஞ்சை தெற்கு மாவட்டம் சார்பில் அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் கண்டன ஆர்பாட்டம் இன்று மாலை நடைபெற்றது.

ஆர்ப்பாட்டதிற்கு எஸ்டிபிஐ கட்சி தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் முஹம்மது இலியாஸ் தலைமை வகித்தார். இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட எஸ்டிபிஐ கட்சி மாநில செயற்குழு உறுப்பினர் அபூபக்கர் சித்திக், கேம்பஸ் ப்ராண்ட் ஆஃப் இந்தியா மாநில பொதுக்குழு உறுப்பினர் வழக்கறிஞர் முஹம்மது தம்பி ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினார்கள்.

முன்னதாக எஸ்டிபிஐ கட்சி மாவட்ட செயலாளர் அபுல் ஹசன் வரவேற்புரை ஆற்றினார். ஆர்ப்பாட்ட முடிவில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் அப்துல் ரஹ்மான் நன்றி கூறினார். ஆர்ப்பாட்டத்தில் மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா அரசின் இஸ்லாமிய விரோத போக்கை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது.

இதில் அதிரை பேரூராட்சி பெருந்தலைவர் எஸ்.ஹெச் அஸ்லம், ஊர் பிரமுகர்கள், எஸ்டிபிஐ கட்சியினர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

செய்தி மற்றும் படங்கள்:
அஃப்ரீத் ( மாணவ செய்தியாளர் )
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...