Pages

Saturday, July 9, 2016

அதிரையில் மஸ்ஜித் ஃபாத்திமா ( ரலி ) புதிய பள்ளிவாசல் திறப்பு விழா நிகழ்ச்சி ! [ படங்கள் ]

அதிராம்பட்டினம், ஜூலை-09
தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம், மேலத்தெரு சானாவயல், பிஸ்மி காம்ப்ளக்ஸ் எதிர்புறம் பகுதியில் புதிதாக கட்டப்பட்ட மஸ்ஜித் ஃபாத்திமா ( ரலி ) புதிய பள்ளிவாசல் திறப்பு விழா நிகழ்ச்சி இன்று [ 09-07-2016 ] சனிக்கிழமை மாலை நடைபெற்றது.

இதில் இஸ்லாமிய மார்க்க பிரசாரகர் மவ்லவி அலி அக்பர் உமரீ கலந்துகொண்டு சிறப்பு சொற்பொழிவு ஆற்றினார். இந்நிகழ்ச்சியில் அதிராம்பட்டினம் பகுதியை சேர்ந்த ஏராளமானோர் கலந்துகொண்டனர். பள்ளியில் முதன் முதலாக மஹ்ரிப் தொழுகை நடத்தப்பட்டது. இதில் அனைவரும் கலந்துகொண்டனர்.

பள்ளியில் கூட்டம் நிரம்பிக் காணப்பட்டதால் பள்ளிவாசல் வரண்டா பகுதியில் அமர வைக்கப்பட்டனர். பெண்களுக்கு தனியிட வசதி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. விழா ஏற்பாட்டினை மஸ்ஜித் ஃபாத்திமா ( ரலி ) நிர்வாக கமிட்டியினர் செய்து இருந்தனர்.

அதிராம்பட்டினம் மேலத்தெருவை சேர்ந்த ஆஸ்திரேலியா வாழ் அதிரையர் முஹம்மது மீரா சாஹிப் அவர்கள் மகன் முஹம்மது யாசின் அவர்களால் இந்த பள்ளி வக்ப் செய்யப்பட்டது குறிப்பிடதக்கது.
 

 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...