Pages

Friday, July 8, 2016

அதிரையில் மஸ்ஜித் ஃபாத்திமா ( ரலி ) புதிய பள்ளிவாசல் திறப்பு விழா அழைப்பு !

அதிராம்பட்டினம், ஜூலை-08
தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம், மேலத்தெரு சானாவயல், பிஸ்மி காம்ப்ளக்ஸ் எதிர்புறம் பகுதியில் புதிதாக கட்டப்பட்ட மஸ்ஜித் ஃபாத்திமா ( ரலி ) புதிய பள்ளிவாசல் திறப்பு விழா நிகழ்ச்சி நாளை [ 09-07-2016 ] சனிக்கிழமை மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது.

இதில் இஸ்லாமிய மார்க்க பிரசாரகர் மவ்லவி அலி அக்பர் உமரீ கலந்துகொண்டு சிறப்பு சொற்பொழிவு ஆற்ற உள்ளார். இந்நிகழ்ச்சியில் அனைவரும் தவறாது கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு மஸ்ஜித் ஃபாத்திமா ( ரலி ) நிர்வாக கமிட்டியினர் சார்பில் அன்புடன் அழைப்பு விடப்பட்டுள்ளது.
 
 
 
 
 
 
 

18 comments:

 1. மாஷா அல்லாஹ்

  ReplyDelete
 2. இவ்வாண்டு மார்ச் மாதத்தில் சானாவயலில் 'மஸ்ஜித் அபூபக்ர்'என்ற பெயரில் ஒரு பள்ளி உருவாக்கி, அதில் தொழுகைகளும் நடந்ததாக ஒரு பதிவைக் கண்டேனே! அதுவும் இதுவும் வேறு வேறா? அல்லது ஒன்றுதானா? குழப்பாக இருக்கின்றதே!

  ReplyDelete
  Replies
  1. This comment has been removed by the author.

   Delete
 3. இவ்வாண்டு மார்ச் மாதத்தில் சானாவயலில் 'மஸ்ஜித் அபூபக்ர்'என்ற பெயரில் ஒரு பள்ளி உருவாக்கி, அதில் தொழுகைகளும் நடந்ததாக ஒரு பதிவைக் கண்டேனே! அதுவும் இதுவும் வேறு வேறா? அல்லது ஒன்றுதானா? குழப்பாக இருக்கின்றதே!

  ReplyDelete
  Replies
  1. மஸ்ஜித் அபூபக்கர் (ரலி) ஆரம்பத்தில் சிறார்களுக்கான மக்தப், பெண்களுக்கான ரமலான் மாத இரவு தொழுகை மற்றும் பயான் நடாத்திடும் ஒரு மர்கஸாக கட்டப்பட்டு திறக்கின்ற நெருக்கத்தில் அதை ஒரு ஐவேளை தொழுகை நடைபெறும் மஸ்ஜிதாக அறிவித்தனர் அதன் நிர்வாகத்தினர்.

   இந்த பாத்திமா (ரலி) மஸ்ஜித் ஆரம்ப முதலே பள்ளியின் நிய்யத்திலேயே எழுப்பப்பட்டு வந்தது மேலும் இது சென்ற வருட ரமலானுக்கே திறக்கப்பட வேண்டியது எனினும் சில தவிர்க்க முடியாத காரணத்தினால் இந்த வருட ரமலானுக்குப் பிறகு திறக்கப்படுகின்றது. மேலும் நீண்டநாள் எதிர்பார்த்திருந்த பக்கத்து நிலமும் கிடைத்திருந்தால் பள்ளி இன்னும் சற்று அளவில் பெரிதாக வந்திருக்கும், அல்லாஹ் நாடவில்லை..

   என்றாலும் இவ்விரு மஸ்ஜித்களும் தனிப்பட்ட இரு சகோதரர்களின் முழு செலவிலேயே கட்டப்பட்டுள்ளது, எத்தகைய நன்கொடைகளும் யாரிடமிருந்தும் அவர்கள் பெறவில்லை என்ற கூடுதல் தகவல்களையும் அறியத் தருகின்றேன்.

   எல்லாம் வல்ல ரஹ்மான் இவ்விரு சகோதரர்களின் தூய எண்ணங்களையும் ஏற்றுக் கொள்வானாக! இவர்களுக்கு சதகத்துல் ஜாரியாவின் நன்மைகளை வழங்குவானாக!

   Delete
 4. அது வேறு இது வேறு

  ReplyDelete
 5. மாஷா அல்லாஹ்

  ReplyDelete
 6. மாஷா அல்லாஹ்

  ReplyDelete
 7. மாஷா அல்லாஹ்

  ReplyDelete
 8. மாஷா அல்லாஹ்.....

  ReplyDelete
 9. Masha allah.நமதூரில் பள்ளி வாசல்கள் அதிகரிப்பதுபோல் நல்லோர்களும் தொழுகையாளிகளும் அதிகரிக்க துவாச்செய்வோமாக.

  ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...