Pages

Wednesday, July 27, 2016

அதிரை காவல் நிலையத்தில் வர்த்தகர்கள் - காவல் துறையினர் கலந்தாய்வுக் கூட்டம் !

அதிராம்பட்டினம், ஜூலை 27
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் திருட்டை ஒழிப்பது தொடர்பாக வர்த்தகர்கள் - காவலர்கள் பங்கேற்ற கலந்தாய்வுக் கூட்டம் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

அதிராம்பட்டினம் காவல் நிலையத்தில் நடைபெற்ற இந்த கலந்தாய்வுக் கூட்டத்துக்கு, பட்டுக்கோட்டை ஏ.எஸ்.பி அரவிந்த்மேனன் தலைமை வகித்தார். அதிராம்பட்டினம் இன்ஸ்பெக்டர் ( பொறுப்பு ) தியாகராஜன் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் தங்கம்-வெள்ளி விற்பனையாளர்கள் சங்க ஒருங்கிணைப்பாளர் ஷிபகத்துல்லாஹ் கலந்துகொண்டு, அதிராம்பட்டினம் காவல் நிலைய போலீஸார் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும் என்றும், இரவு நேரங்களில் அதிரையின் குடியிருப்பு மற்றும் பிராதான பகுதிகளில் காவலர்கள் வாகன ரோந்தில் ஈடுபட வேண்டும் என்ற கோரிக்கை வைத்தார். அதே போல் அதிராம்பட்டினம் பேரூராட்சி தலைவர் எஸ்.எச் அஸ்லம் கலந்துகொண்டு, அதிராம்பட்டினம் பகுதியில் கட்டுமான மற்றும் இதர பணிகளில் ஈடுபடும் வெளி மாநிலத்தவர் குறித்து தகவல்கள் சேகரிக்க வேண்டும் என்றும், அதிராம்பட்டினம் போரூராட்சி பொதுநிதியில் இருந்து காவலர்கள் கூறும் அதிராம்பட்டினம் பிரதான பகுதிகளில் கண்காணிப்பு கேமிராக்கள் பொறுத்தி தர தான் ஏற்பாடு செய்வதாக வாக்குறுதி அளித்தார். இவற்றை பராமரிக்கும் பொறுப்பை அதிராம்பட்டினம் காவல் நிலையம் ஏற்றுக்கொள்ள வேண்டும்' என்றார்.

கூட்டத்தில் 'சமூக ஆர்வலர்' கே.எம்.ஏ ஜமால் முஹம்மது பேசியதாவது, வெளியூர் மற்றும் வெளி மாநில ஆட்களை பணியில் அமர்த்தும் கட்டுமான நிறுவன உரிமையாளர்கள் / ஒப்பந்ததாரர்கள் பணியாளர் குறித்த தகவல் அடங்கிய நிறுவன அடையாள அட்டைகள் வழங்க அறிவுறுத்த வேண்டும். மேலும் வீதிகளில் சிறு சிறு வியாபாரிகளைப் போல் சுற்றித் திரியும் இனம் தெரியாத நபர்களை கூப்பிட்டு விசாரிக்க வேண்டும் என்றார்.

பின்னர் பட்டுக்கோட்டை ஏ.எஸ்.பி அரவிந்த்மேனன் கூட்டத்தில் கலந்துகொண்ட வர்த்தகர்களிடம் கூறிய அறிவுரையில், அனைத்துக் கடைகளிலும் எச்சரிக்கை ஒலி எழுப்பும் கருவி பொருத்த வேண்டும். இரவு நேரங்களில் சந்தேகத்துக்குரிய வகையில் நடமாட்டம் இருப்பது தெரிய வந்தால், உடனடியாக காவல் நிலையத்துக்கு தகவல் அளிக்க வேண்டும். கூடுதலாக இரவுக் காவலாளிகளை பணியமர்த்த வேண்டும். கட்டாயம் கண்காணிப்பு காமரா பொருத்த வேண்டும் என்று வர்த்தகர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. மேலும் பெண்கள் இரவு நேரங்களில் அதிக நகைகளை அணிந்துகொண்டு வீதியில் நடமாட வேண்டாம் என்றார்.

கூட்டத்தில் அதிராம்பட்டினம் பேரூராட்சித் தலைவர் எஸ்.எச் அஸ்லம், துணைத் தலைவர் பிச்சை, திமுக அதிராம்பட்டினம் பேரூர் செயலாளர் இராம. குணசேகரன், தங்கம்-வெள்ளி விற்பனையாளர்கள் சங்க ஒருங்கிணைப்பாளர் ஷிபகத்துல்லாஹ், சமூக ஆர்வலர் கே.எம்.ஏ ஜமால் முஹம்மது, கவுன்சிலர் ஹாஜா முகைதீன் உள்பட அதிராம்பட்டினம் வர்த்தகர்கள் பலர் கலந்து கொண்டனர்.
 

1 comment:

  1. சமீபத்தில் கேமராவில் பதியப்பட்ட திருடனைப் பற்றி இதுவரை எந்த தகவலும் தெரியவில்லை ..அது தெரியாது ஏன்னா அவனெல்லாம் மாமூல் சரியாக கொடுக்க வேண்டிய இடத்திற்கு கொடுக்கிறான் அவனைப்போல் வர்த்தகர்கள் கொடுக்க முடியுமா? ஆற்று மண்ணை அள்ளிட்டு போறவர்களை பிடித்து கைது பண்ணமுடியும் என்றால் வீட்டில் /வர்த்தக நிலையத்தில் திருடும் திருடனை ஏன் கைது பண்ண முடியவில்லை..CCTV இருந்து என்ன பயன்? . திருடன் உள்ளூரில் தான் இருக்கான்.. பொதுமக்கள் தான் உஷாராக இருக்கணும்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...