Pages

Saturday, July 9, 2016

நடமாடும் நூலகம் அறிமுகம் !

தஞ்சாவூர் சரஸ்வதி மகால் நூலகத்தின் சார்பில் நடமாடும் நூலகத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் என்.சுப்பையன் அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

தஞ்சாவூர் நடமாடும் நூலகத்தினை தொடங்கி வைத்து மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது:
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் உத்தரவிற்கிணங்க பாரம்பரியமிக்க உலகப்புகழ் பெற்ற சரஸ்வதி மகால் நூலகத்தினை மேம்படுத்துவதற்காக பல்வேறு திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நூலகத்தினை உலகத் தரம் வாய்ந்த நூலகமாக மாற்றுவதற்கான கூடுதல் நிதியினை வழங்கியுள்ளார்கள்.  மத்திய அரசு இந்நூலகத்திற்கு உதவி வருகின்றது. இதில் புதிய முயற்சியாக நடமாடும் நூலகம் எனும் சிறப்பு மிக்க நூல்களைத் தாங்கிச் செல்லும் நான்கு சக்கர வாகனம் வாங்கப் பெற்று பொது மக்கள் அனைவரும் பயன்படுத்தும் வகையில் அமைக்கப் பெற்றுள்ளது.

இந்த வாகனம் நம் மாவட்டத்தில் அனைத்து கிராமப்புற பகுதிகளுக்கும், நகரின் பல்வேறு பகுதிகளுக்கும் மட்டுமல்லாது பிற மாவட்ட பகுதிகளுக்கும், பிற மாவட்ட பகுதிகளில் நடைபெறும் புத்தக கண்காட்சிக்கு சென்று அப்பகுதி மக்கள் பயன்பெறும் வகையில் நூலக வெளியீடுகளை 600க்கும் மேற்பட்ட தலைப்புகளில் 1 இலட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நூல்கள் விற்பனைக்கு கிடைக்கும்.  மேலும், நூல்கள் வாசிப்பதற்கும் வாசகர்களுக்கு வழங்கப்பெறும். நூல்கள் 10 சதவிகிதம் முதல் 50 சதவிகிதம் வரை விற்பனை கழிவு வழங்கப்படும்.

இது மட்டுமல்லாது பல்வேறு பகுதிகளில் வாழும் பொது மக்கள் தங்களிடம் உள்ள ஓலைச்சுவடிகள், காகிதச் சுவடிகள், பழமையான ஆவணங்கள், ஓவியங்கள், நூல்கள் போன்றவற்றை நூலகத்திற்கு அன்பளிப்பாக வழங்கிட விரும்பினால் நடமாடும் நூலகப் பணியாளர்களிடமே வழங்கிடலாம். மேலும், நூலகத்தில் புரவலர் திட்டத்தின் கீழ் நன்கொடை வழங்க முன் வருபவர்களுக்கு நன்கொடை வழங்கிடலாம்.

இத்தகு சிறப்பு வாய்ந்த நூலகத்தின் நடமாடும் நூலகத்தினை தஞ்சை வாழ் மக்களும், தமிழக மக்களும் பயன்படுத்திக் கொண்டு பயன் பெறலாம். மேலும், நடமாடும் நூலகத்திற்கான வாகனம் தேசிய நூலக வளர்ச்சி நிதியிலிருந்து சுமார் ரூ.7.5 இலட்சம் செலவில் வாங்கப்பெற்றுள்ளது.  இது பொது மக்களிடையே நூல்கள் வாசிக்கும் பழக்கத்தை ஊக்கப்படுத்தும் விதமாக அமையும்.  இவ்வாறு மாவட்ட ஆட்சியர் டாக்டர் என்.சுப்பையன் அவர்கள் தெரிவித்தார்கள்.

இந்நிகழ்ச்சியில் நிர்வாக அலுவலர் திருமதி.அ.பூங்கோதை, பரம்பரை அறங்காவலர் திரு.சிவாஜிராஜா போன்ஸ்லே தமிழ் பண்டிதர் திரு.மணிமாறன் மற்றும் மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

2 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. Great news....!
    அதிராம்பட்டினத்துக்கு எப்போது வரும் என்று
    கொஞ்சம் கேட்டு சொல்லுங்கள், please

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...