Pages

Monday, July 25, 2016

உங்க வீட்டு மருமகன் எப்படி ? சிறிய அலசல் !

மாமியார்களே......! உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா...?

இறைவனின் கிருபையால் ஒரு வழியாக கல்யாணம் நல்லபடியாக சிறப்பாக நடந்து முடிந்தது, இது கல்யாண வீட்டுக்காரர்கள் அடிக்கடி சொல்லுவது.....?

குறிப்பாக ஒரு சில இடங்களில் இப்போ கிட்டடியில் அதாவது அண்மையில் கல்யாணங்கள் நடந்து முடிந்து இருக்கின்றது, இது “அல்மோஸ்ட் அனைவருக்கும் தெரியும்.

அநேகமாக புதுப்பொண்ணுகள் எல்லாம்.....? புது மாப்பிள்ளைகள் எல்லாம் பிறந்த இடத்தை விட்டு புகுந்த இடத்தை நாடி இருப்பார்கள்.

மாமியா வீடு, புது அனுபவம், உணவுக் கலவைகளின் வித்தியாசமான சுவைகள், வயிற்றை கலக்குதல், அட்டாச் பாத் ரூம், ஏசி ரூம், அட்டகாசமான கட்டில்.

எங்கள் காலத்து சிறிய மணவறை சுகமான மயக்கத்தை வரவழைத்தது. இக்காலத்து பெரிய மணவறை ஏக்கம் கலந்த கலக்கத்தை வரவைக்குமோ.......?

மாமியார்களே என்று சொல்லிவிட்டு எதை எதையோ எழுதிக்கிட்டு இருக்கேன்.

சரி மாமியார்களே இப்போ விஷயத்துக்கு வருகிறேன்.

உங்கள் வீட்டு மருமகன் /  மருமகள் எப்படி?
அவர்களுடைய குணாதிசயங்கள் எப்படி?
பழக்க வழக்கங்கள் எப்படி?

இப்படி பல கேள்விகளை அடுக்கிக்கொண்டே போனால் உங்களுக்கு மயக்கம் வந்துடுமோ என்று எனக்கு பயமாக இருக்குது..........!

அதனாலே....! உங்களுக்கு இரண்டு டிப்ஸ் தருகிறேன், அதை வைத்து ஓரளவு கணக்கில் கொண்டு வரலாம்.

இந்த படத்தை பாருங்கள்.

முதலாவது டிப்ஸ்.
வீட்டுக்குள் வரும்போது மிதியடியை இப்படி கச்சிதமாக சரிசமமாக கழட்டி வைத்தால் சாந்தமானவர்கள் என்று அர்த்தமாம். 

......................................
மாறாக, மிதியடியை இப்படி ஏறுக்கு மாறாக கழட்டி வைத்தால் சாந்தமானவர்கள் இல்லை என்று அர்த்தமாம்.3,4,5


==============================================================
இரண்டாவது டிப்ஸ்:
உடையை கழுவி கொடியில் காயப்போடும் போது இப்படி சரிசமமாக கச்சிதமாக நூல் பிடித்தது போல் காயப்போட்டால், எல்லா விஷயத்திலும் சரியாக இருப்பார்கள் என்று அர்த்தமாம்.


......................................
மாறாக, இப்படி அலங்கோலமாக காயப்போட்டால் எல்லா விஷயத்திலும் சரியாக இருக்க மாட்டார்கள் என்று அர்த்தமாம்.

மேலும், மேலே சொல்லப்பட்டவைகள் அனைத்தும் நானாகவே சொன்னது கிடையாது. மாறாக நான் சிறுவயதாக இருக்கும் போது (புதுமனைத் தெருவில்) என் அன்புத் தாய் “மர்ஹூமா, செ.ஒ.(S.O). உம்மாகனி அம்மாள் அவர்கள் மற்றவர்களிடம் பேசும்போது நான் கவனித்து இருக்கின்றேன்.

அன்று ஒருநாள் அதாவது எனக்கு கல்யாணம் நடத்திவைக்க பேச்சு அடிபடும்போது என்தாயிடம் இதைப்பற்றி நான் கேட்கும் போது, என் தாய் என்னிடம் சொன்னது, அவர்கள் சிறுவயதாக இருக்கும் போது (கடற்கரை தெருவில்) மொம்மா சாச்சிதான் சொன்னாக என்று பதில் வந்தது. என் தாய் பிறந்த வருடம் 1937.

மாமியார்களே........! மருமொவனையும் மருமொவளையும் நல்லா கவனிங்கோ.......!

குறிப்பு:- உதாரணத்துக்காக ஆண்களின் அணிகலன்கள் மட்டும் இங்கு காட்டப்பட்டுள்ளது.
K.M.A. Jamal Mohamed.,
S/o. K Mohamed Aliyar (Late)
PRESIDENT of pkt Tk
State Executive Member
National Consumer Protection Service Centre.
Adirampattinam-614701.
consumeradirai@gmail.com

11 comments:

 1. உம்மா கனி அவர்களின் மகனே ! VKC மிதியடிக்கு நல்ல விளம்பரத்தை கொடுத்திருக்கிறீர்கள்; இப்போ யாரு மிதியடி - கைலியை வைத்து மருமகனை பற்றி பேசுகிறார்கள்? நாலு பெண்கள் ஓன்று கூடினால் சீரியல் பற்றி பேசின காலம்போய் இப்போ வீட்டுக்கு வந்த/ புதிதாக திருமணமான (தவ்ஹீது ) செயல் எப்படி என்று தான் பேசுறாங்க. சொல்லும் செயலும் ஒன்றா இருக்கான்னு மணிக்கணக்கா பேசுறாங்க அல்லது அதிகம் செல்போனை வீட்டு மருமகன் பயன்படுத்துறாரான்னு பார்க்கிறார்கள் இதை வைத்தே ஒரு முடிவுக்கு வருகிறார்கள் . அன்பே அன்பே என்று ஆரம்பித்து ....அடி போடின்னு போய்ட்டுருக்கு திருமண வாழ்க்கை. மருமகன் தன் கைலியை மனைவி கழுவி காற்றில் உலர்த்த போடும் நிலைமையில் இருக்கு இந்த காலம் அது தெரியுமோ!

  ReplyDelete
  Replies
  1. கருத்து பதிவிட்ட சகோதரர் மஸ்தான் கனி அவர்களுக்கு நன்றி.

   இன்னமும் பழமையை விரும்பும் குடும்பங்கள் இருக்கத்தான் செய்கின்றன. தமிழ் பேசும் பல கோடி குடும்பங்களில் ஒரு குடும்பத்து இது பொருந்தாதா........?

   சிந்தித்து பாருங்கள்.

   Delete
 2. பண்டைய பெண்களிடம் நிலவிய ஒரு (மூட)நம்பிக்கையை ஜமால் காக்கா மலரும் நினைவாக கூறியிருந்தாலும் இது தேவையற்ற பதிவே.

  ReplyDelete
  Replies
  1. கருத்து பதிவிட்ட சகோதரர் அதிரை அமீன் அவர்களுக்கு நன்றி.

   இது தமிழ் பேசும் பல மக்கள் கோடி உண்டு, இது பொதுவாக எழுதி பதியப்பட்டதாகும், இது தேவையா அல்லது தேவை இல்லையா என்ற முடிவை எடுக்க உங்களுக்கு எந்த அதிகாரமும் கிடையாது..

   இது யாருக்காக எழுதி பதியப்பட்டது?
   இது எந்த மாமியாவுக்காக எழுதி பதியப்பட்டது?
   இது எந்த ஊரு மாமியாவுக்காக எழுதி பதியப்பட்டது?
   இது எந்த சமூகத்தை சேர்ந்த மாமியாவுக்காக எழுதி பதியப்பட்டது?
   இது எந்த இனத்தை சேர்ந்த மாமியாவுக்காக எழுதி பதியப்பட்டது?

   உங்களால் சொல்ல முடியுமா?

   இது பொதுவாக எழுதப்பட்டதாகும்.

   இது மூட நம்பிக்கையா அல்லது இல்லையா? என்று தீர்மானிக்க யாராலும் முடியாது. (உங்களையும் சேர்த்துதான்)

   இந்தப் பதிவு உங்களுக்கு பிடிக்க வில்லையா? பேசாமல் இருந்து விடுவது நல்லது.

   Delete
 3. அருமையான பதிவு. டீவி இல்லாத குடும்பத்து வீட்டினரும், புரம், பெரும்பேச்சு பேச விரும்பாத மக்களும் இந்த பதிவை உணர்வார்கள்.

  ReplyDelete
  Replies
  1. கருத்து பதிவிட்ட உங்களுக்கு நன்றிகள் பல.

   Delete
 4. அருமையான பதிவு Ka Ka

  ReplyDelete
  Replies
  1. கருத்து பதிவிட்ட உங்களுக்கு நன்றிகள் பல.

   Delete
 5. அருமையான பதிவு Ka Ka

  ReplyDelete
 6. அருமையான தேவையான பதிவு இதுபோன்ற பதிவுகள்தேவை. .

  ReplyDelete
  Replies
  1. கருத்து பதிவிட்ட உங்களுக்கு நன்றிகள் பல.

   Delete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...