Pages

Thursday, July 7, 2016

அதிரையில் நடந்த முதல்நாள் கால்பந்தாட்ட தொடர் போட்டியில் வேலங்குடி அணி வெற்றி !

அதிராம்பட்டினம், ஜூலை 07
தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் இளைஞர்கள் கால்பந்துக் கழகம் 22 ஆம் ஆண்டு, S.S.M குல் முஹம்மது அவர்களின் நினைவு 16 ஆம் ஆண்டு மாபெரும் எழுவர் கால்பந்து தொடர் போட்டியின் முதல்நாள் ஆட்டம் இன்று [ 07-07-2016 ] மாலை கடற்கரைத்தெரு விளையாட்டு மைதானத்தில் தொடங்கியது.

இன்றைய முதல்நாள் ஆட்டத்தில் காஞ்சிபுரம் அணியினரும், சிவகங்கை மாவட்டம்  வேலங்குடி அணியினரும் மோதினார்கள். விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்ட இறுதியில் 4-3  என்ற கோல் கணக்கில் வேலங்குடி அணியினர் வெற்றி பெற்றனர்.

முன்னதாக சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட அக்பர் ஹாஜியார், முஹம்மது முகைதீன், காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முன்னாள் உடற்கல்வி ஆசிரியர் ராமச்சந்திரன் உள்ளிட்டோர் இன்றைய ஆட்டத்தை துவக்கி வைத்தார்கள்.

ஆட்ட அம்பயர்களாக வேலுசாமி, ராஜா ஆகியோர் பணியாற்றினர். நிகழ்ச்சிகள் அனைத்தையும் அஹமது ஹாஜா தொகுத்து வழங்கினார்.

நாளைய ஆட்டமாக பட்டுக்கோட்டை செவன்ஸ் பட்டுக்கோட்டை அணியினரும், பாலு மெம்மோரியல் திருச்சி அணியினரும் விளையாட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய முதல்நாள் ஆட்டத்தை காண ஏராளமான விளையாட்டுப் பிரியர்கள் மற்றும் பொதுமக்கள் மைதானத்திற்கு திரளாக வருகை தந்து ரசித்தனர்.

செய்தி மற்றும் படங்கள்:
அஃப்ரீத் ( மாணவ செய்தியாளர் )
 
 
 
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...