Pages

Monday, July 11, 2016

காதிர் முகைதீன் கல்லூரியில் தொழில் முனைவோருக்கான வழிகாட்டி கருத்தரங்கு நிகழ்ச்சி !

அதிராம்பட்டினம், ஜூலை 11
தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி தொழில் வழிகாட்டி மையம் சார்பில் தொழில் முனைவோருக்கான வழிகாட்டி கருத்தரங்கு நிகழ்ச்சி கல்லூரி கலை அரங்கில் இன்று நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் முனைவர் ஏ.எம் உதுமான் முகையதீன் தலைமை வகித்து கருத்தரங்க நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சென்னை புளு பாரத் எக்ஸிம் பி (லிட்) நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் கே.எஸ் கமாலுதீன் பேசுகையில்,
மாணவர்கள் தொழில் முனைவோராக மாற விரும்பினால் அதில் வெற்றி பெறுவதற்கான வழிமுறைகளை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். முதலில் நீங்கள் தொடங்கும் தொழில் அல்லது வணிகம் தொடர்பான முழுவிவரங்களையும் அறிந்து கொள்ள வேண்டும், அதுமட்டு மின்றி வியாபார வளர்ச்சியில் முழுகவனமும் இருக்க வேண்டும். உள்ளூர் மற்றும் வெளிநாடு வணிகம் தொடர்பாக அறிந்துகொள்ள படிப்படியாக ஆர்வம் காட்ட வேண்டும்' என்றார்.

இதில் 300 க்கும் மேற்பட்ட இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர்.முகாம் ஏற்பாட்டினை கல்லூரி தொழில் வழிகாட்டி மையத்தின் அமைப்பாளர் முனைவர் ஏ. சேக் அப்துல் காதர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் உதவி பேராசிரியர் ஏ. ஹாஜா அப்துல் காதர் ஆகியோர் செய்தனர்.
 
 
 
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...