Pages

Wednesday, August 10, 2016

எமிரேட்ஸ் விமான விபத்தில் உயிர் பிழைத்த இந்தியப் பயணிக்கு 1 மில்லியன் டாலர் பரிசு !

அதிரை நியூஸ்:
துபாய், ஆகஸ்ட் 10
கடந்த வாரம் நிகழ்ந்த எமிரேட்ஸ் விமான விபத்தில் உயிர் பிழைத்த அப்துல் காதர் (வயது 62) என்பவருக்கு அடுத்த வாரமே 1 மில்லியன் டாலர் பரிசு கிடைத்து சந்தோஷத்தை இரட்டிப்பாக்கியுள்ளது.

வரும் டிசம்பர் மாதத்துடன் பணி ஓய்வுபெறவுள்ள கேரளாவைச் சேர்ந்த அப்துல் காதர் ரமலான் ஈகைத் திருநாளை கொண்டாட ஊருக்குச் செல்லும் வழியில் துபை டூட்டி ஃப்ரியில் டிக்கெட்டை வாங்கிச் செல்ல மீண்டும் ஊரிலிருந்து திக்... திக்... நிகழ்வுடன் திரும்பிய ஒரு வாரத்தில் சுமார் 3.67 மில்லியன் திர்ஹத்திற்கு சொந்தக்காரராகி உள்ளார்.

திடீர் மில்லியனர் அப்துல் காதர் பரிசை வென்றிருந்தாலும் நிதானமாகவே பேசுகிறார். உழைத்துக் கிடைக்கும் ஊதியத்திற்கு இணையானதல்ல இந்தப்பரிசு. இந்தப் பரிசுப் பணத்தை வைத்துக் கொண்டு கேரளாவில் தேவையுடைய ஏழைகளுக்கும் மருத்துவ தேவையுடையவர்களுக்கும் நேரடியாக உதவப் போகிறேன் என்று கூறியவருக்கு இந்த உதவும் மனப்பாங்கை அவரது 21 வயது மகன் 13 நாள் குழந்தையாக இருக்கும்போது திடீரென முடக்கு வாத நோயால் பாதிக்கப்பட்டதால் மனரீதியாகவும், பணரீதியாகவும் பட்ட கஷ்டங்கள் இயல்பாகவே பிறருக்கு உதவும் தன்மையை வழங்கியுள்ளன. ஏழைகளுக்கு உதவும் வாய்ப்பை இந்தப் பரிசுப் பணத்தின் மூலம் வழங்கிய இறைவனுக்கு அவர் நன்றி கூறவும் தவறவில்லை.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...