Pages

Tuesday, August 9, 2016

பட்டுக்கோட்டையில் 18 வயதிற்கு உட்பட்ட மாற்றுத்திறன் கொண்டோருக்கு 11 ம் தேதி மருத்துவ முகாம் !

தஞ்சாவூர் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில்
18 வயதிற்குட்பட்ட மாற்றுத்திறன் கொண்டோருக்கான
மருத்துவ மதிப்பீட்டு முகாம் 10 நாட்கள் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் ஆ.அண்ணதுரை அவர்கள் தகவல் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக வெளியிட்டுள்ள செய்தியில் கூறியது, தஞ்சாவூர் மாவட்டத்தில் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் 18 வயதிற்குட்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் 18.10.2016 அன்று அந்தந்த ஒன்றிய ஆரம்ப சுகாதார நிலையங்களில் தொடங்கப்படவுள்ளது.

இம்முகாமில் தேசிய அடையாள அட்டை வேண்டுவோர், உதவி உபகரணங்களான மூன்று சக்கர வண்டி, சக்கர நாற்காலி, காதொலி கருவி, நடக்க உதவும் ரோலேட்டர்கள், கை மற்றும் கால்களுக்கென காலிப்பர்கள் ஆகியவை தேவைப்படுவோர் முகாம்களில் பங்கு பெற்று, எவ்வித கட்டணமுமின்றி பயன் பெற கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மேலும்  உதடு மற்றும் அன்னப்பிளவு அறுவை சிகிச்சைகள், கை மற்றும் கால்களை சரி செய்யும் ஆர்த்தோ சார்ந்த அறுவை சிகிச்சைகள் ஆகியவைகளும் கட்டணமின்றி மேற்கொள்ள மதிப்பீட்டு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இம்முகாம் 10.08.2016 முதல் 20.08.2016ம் தேதி வரை நடைபெற உள்ளது. 10.08.2016 அன்று சேதுபாவாசத்திரம் ஒன்றிய ஆரம்ப சுகாதார நிலையம், அழகியநாயகிபுரம் மற்றும் பத்துகாட்டிலும் கும்பகோணத்தில் அரசு மருத்துவமனையிலும், 11.08.2016 அன்று அரசு மருத்துவமனை, திருவிடை மருதூரிலும், அரசு ஆண்கள் மேனிலைப்பள்ளி பட்டுக்கோட்டையிலும், 12.08.2016 அன்று அரசு மருத்துவமனை, பேராவூரணியிலும், மேரிஸ் கார்னர் தூய அந்தோணியார் மேல் நிலைப்பள்ளி, அன்பு இல்லம், தஞ்சாவூரிலும், 13.08.2016 அன்று ஆரம்ப சுகாதார நிலையம் அம்மாப்பேட்டையிலும், அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மதுக்கூரிலும், 16.08.2016 அன்று ஆரம்ப சுகாதார நிலையம், பூதலூரிலும், 17.08.2016 அன்று ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, திருவோணத்திலும், அரசு மருத்துவமனை, திருவையாற்றிலும், 18.08.2016 அன்று ஆரம்ப சுகாதார நிலையம், திருப்பனந்தாளிலும், 19.08.2016 அன்று ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, வல்லம் கிழக்கிலும், 20.08.2013 அன்று அரசு மருத்துவமனை, ஒரத்தநாட்டிலும் மற்றும் பாபநாசத்திலும் நடைபெறும்.

இம்முகாமில் பயன்பெற விரும்புவோர் முகாமிற்கு வரும் போது தவறாமல் மூன்று பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள், ரேஷன் அட்டை மற்றும் நகல், வருமானச்சான்று மற்றும் மாற்றுத்திறனாளிக்கான அடையாள அட்டை இருப்பின் அந்த அட்டை மற்றும் நகல் ஆகியவைகளை கொண்டு வர வேண்டும். அனைத்து ஒன்றியங்களிலும் நடைபெறும் இந்த மருத்துவ மதிப்பீட்டு முகாம் காலை 9.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை நடைபெறும்.

எனவே, மேற்காணும் உதவி உபகரணங்கள், அறுவை சிகிச்சைகள் தேவைப்படுவோர் இம்முகாம்களில் கலந்;து கொண்டு பயனடைய  கேட்டுக் கொள்கிறேன்.  இவ்வாறு மாவட்ட ஆட்சியர் திரு.ஆ.ஆண்ணாதுரை அவர்கள் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...