Pages

Sunday, August 7, 2016

துபாயில் 36 புதிய பாலங்கள்! 600 ஹெக்டரில் சாலை ஓர மரங்கள் !!

அதிரை நியூஸ்:
துபாய், ஆகஸ்ட் 07
இன்டெர் சேஞ்சஸ் (Inter Changes) எனப்படும் போக்குவரத்து இணைப்புப் சுற்றுப் பாலங்கள் சர்வதேச ரீதியில் மிகவும் பரவி வருகின்றன. இந்த வகை பறக்கும் பாலங்கள் சீனாவிலும், அமெரிக்காவிலும் அதிகம். அத்தகைய தலைசுற்றல் பாலங்களில் ஒன்று துபாய் ஷேக் ஜாயித் ரோட்டிலும் உண்டு. (படம் காண்க)
துபாயில் பெருகிவிட்ட போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த 36 புதிய பாலங்கள், புதிய சாலைகள், புதிய ஷின்டாகா (கடல் மேல்) போக்குவரத்துப் பாலம் (மாதிரி படம் காண்க), கிரீக் (கடல்) நீர்வழி இணைப்புக்கள், பயணியர் நிலையங்கள் மற்றும் பாதசாரிகள் முக்கிய சாலைகளை கடக்க நடைபாலங்களை நிர்மானிக்கவும் அதேவேளை சுற்றுச்சூழலை பாதுகாக்க சாலை ஒரங்களில் 600 ஹேக்டேர் பரப்பளவில் மரங்களை நடவும் துபை போக்குவரத்து துறை திட்டமிட்டுள்ளது (RTA). (இது நம்ம நாட்ல மரம் நட்டு அன்றோடு மறந்து விடுகின்ற சம்பிரதாய செயல் அல்ல).

இந்த திட்டங்களில் பெரும்பாலானவற்றை எதிர்வரும் 2017 ஆம் ஆண்டு முதல் காலாண்டிற்கு முடிக்கவும் எஞ்சியவற்றை படிப்படியாக 2019 ஆம் ஆண்டுக்குள் முடிக்கவும் திட்டமிட்டுள்ளனர்.

பயணிகளின் வசதிக்காக புரூஜ் கலீஃபா மெட்ரோ ஸ்டேஷனை விரிவுபடுத்துதலும் இத்திட்டங்களில் ஒன்றாகும். இதன்வழி நாளொன்றுக்கு 1,80,000 பயணிகள் அவர்களுக்கான பல்வேறு சிறப்பு வசதிகளுடன் பயன்படுத்திக் கொள்ள முடியும். மேற்குறிப்பிட்டுள்ள அத்தனை வசதிகளையும் செய்து தரப்போவது துபை சாலை மற்றும் போக்குவரத்து துறை (RTA) மட்டுமே. (நம்ம ஊர்ல போக்குவரத்து துறை பஸ்ஸை ஒழுங்காக பராமரித்தால் அதுவே பெரிய விஷயம்)

ஆனால் ஒன்னுங்க நம்ம தமிழக சத்த சபையில் அடித்துக் கொள்வது போல் நாந்தான் ரெயிலு வுட்டேன், நாந்தான் பாலங்கட்டுனேன்னு சாதனை கூச்சல் போடுற ஒருத்தனக் கூட இங்கு காணோமுங்க! அதுல ஊழல், விசாரணை கமிஷன்னும் ஒன்னுகூட இல்லீங்க! இதைத்தான் நிறைகுடம் தளும்பாதுன்னு சொல்றாங்களோ!

Sources: Khaleej Times & Gulf News
தொகுப்பு: நம்ம ஊரான்
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...