Pages

Wednesday, August 3, 2016

ஆக. 5 ல் பட்டுக்கோட்டை ஆர்டிஓ அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம்: பங்கேற்க அழைப்பு !

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் உள்ளிட்ட 4 மாற்றுத்திறனாளி அமைப்புகளின் கூட்டு இயக்கம் சார்பில் மற்ற மாநிலங்களைப்போல தமிழகத்திலும் மாற்றுத்திறனாளிகளுக்கு 40% சதவீத ஊனம் இருந்தாலே வேறு நிபந்தனை இல்லாமல் மாத உதவித்தொகை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த பிப்ரவரி மாதம் சென்னையில் நீடித்த தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டது.

அதன் எதிரொலியாக, கடந்த சட்டமன்ற காலத்தின் கடைசி நாளான பிப்.20 அன்று சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் அறிவிப்பு வெளியிட்டார்.  மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை வழங்குவதற்கான ஊனத்தின் சதவீதத்தை 60%-லிருந்து 40% சதவீதமாக குறைப்பதாகவும், வேலை இல்லாமல் இருக்கும் அனைத்து மாற்றுத்திறனாளிகளும் வேறு நிபந்தனை ஏதுமின்றி உதவித்தொகை பெறத்தக்க வகையில் விதிகளை தளர்த்துவதாகவும் அறிவிப்பில் தெரிவித்தார்.  முதலமைச்சரின் அறிவிப்பை தொடர்ந்து இரண்டே நாட்களில் பிப்.22 தேதியிட்டு அரசாணை எண்.27 வெளியிடப்பட்டது.

6 மாத காலமாகியும் அமலாகவில்லை
இந்த அரசாணை வெளியாகி 6 மாதம் நிறைவடைந்துவிட்டது.   எனினும், மாவட்டங்களில் ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் பலருக்கும் இந்த அரசாணை பற்றி ஏதும் தெரியாத நிலைமையே உள்ளது.   வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் மாற்றுத்திறனாளிகள் முறையிடுகிறபோது அரசாணை குறித்தோ, அரசின் உத்தரவு குறித்தோ எங்களுக்கு எந்த உத்தரவும் வரவில்லை. எனவே எங்களால் எதுவும் செய்ய இயலாது என தெரிவிக்கின்றனர்.   மேலும், முதலமைச்சரின் இந்த உத்தரவை அமல்படுத்த தேவையான நிதி ஆதாரம் ஏதும் செய்யவில்லை என்றும் தெரிகிறது. சட்டமன்றத்தில் சமீபத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பட்ஜெட்டிலும் இது குறித்த எந்த அறிவிப்பும் இல்லை. இதனால் மாற்றுத்திறனாளிகள் செய்வது அறியாது திகைக்கின்றனர்.

ஆக.5 மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள்
எனவே கிடப்பில் போடப்பட்டுள்ள முதலமைச்சரின் உத்தரவையும், அரசாணையையும் உடன் அமல்படுத்தக் கோரி ஆகஸ்ட் 5 ஆம் தேதி வெள்ளிக்கிழமை அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பாகவும், வட்டாட்சியர் அலுவலகங்கள் முன்பாகவும் பெருந்திரள் ஆர்ப்பாட்டங்களை நடத்த எமது சங்கம் முடிவு செய்துள்ளது.   சக்தியாக இந்த ஆர்ப்பாட்டங்களை நடத்திடவும், அனைத்து ஜனநாயக சக்திகளும், பொதுமக்களும் ஆதரவு அளிக்கவும் வேண்டுகிறோம்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...