Pages

Tuesday, August 16, 2016

தாயின் கடனை அடைக்க முன்வந்த 8 வயது சிறுவன் !

அதிரை நியூஸ்:
ஆகஸ்ட் 16
கடந்த சனிக்கிழமை அன்று பீஹார் மாநிலத்தின் பெகுசராய் மாவட்டத்தில் நடந்த 'லோக் அதாலத்' என்ற மக்கள் பஞ்சாயத்து நீதிமன்றத்தில் பரிதாப கோலத்தில் 8 வயது சிறுவன் தன் தாயின் கடனை அடைக்க முன்வந்தது அதிகாரிகளை அதிரச் செய்தது.

சுமார் 10 வருடங்களுக்கு முன், சோம்பேறி கணவனால் வருமானமின்றி தவித்த அனிதா தேவி என்பவர் கடந்த 2006 ஆம் ஆண்டு சொந்தமாக சிறுதொழில் செய்திட வங்கி ஒன்றில் 21,000 ஆயிரம் ரூபாயை கடனாக பெற்றிருந்தார்.

இந்நிலையில் கடந்த 2012 ஆம் ஆண்டு நடந்த விபத்து ஒன்றில் அனிதா தேவி இறந்துவிட கணவனும் பொறுப்பாக ஒடிவிட அனாதையான அனிதா தேவியின் தற்போதைய 8 வயது மகன் உறவினர்களின் தயவில் வளர்ந்து வருகிறான்.

தாய் பட்ட கடனை அடைக்கச் சொல்லி 8 வயது சிறுவனுக்கு வங்கி ஓலை அனுப்ப, கிராமத்தினரின் மனிதாபிமான உதவியால் சுமார் 5000 ரூபாய் சேர்த்த 8 வயது சிறுவன் சுதீர் குமார் 'லோக் அதாலத்' நடைபெறும் இடத்தில் முதற்கட்ட தவணையை செலுத்தச் சென்றான்.

விஷயத்தை அறிந்த, மாவட்ட நீதிபதியும் லோக் அதாலத் தலைவருமான கங்கோத்ரி ராம் திரிபாதி அவர்கள் 8 வயது சிறுவனுடைய பொறுப்புணர்வை வியந்து பாராட்டியதுடன் முழுக்கடனை வங்கியுடன் பேசி தள்ளுபடி செய்ததுடன் அதற்கான ஒப்புதல் ரசீதையும் பெற்றுக் கொடுத்தார்.

தாய் பட்ட கடனை தான் செலுத்திவிட வேண்டும் என நினைத்த அனாதை சிறுவனின் இந்த அர்ப்பணிப்பு உணர்வை அவனது கிராமத்தினர் வியந்து பாராட்டி வருகின்றனர்.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...