Pages

Wednesday, August 3, 2016

பட்டுக்கோட்டையில் பள்ளி தலைமை ஆசிரியையிடம் 9 பவுன் சங்கிலி பறிப்பு

பட்டுக்கோட்டை, ஆக. 03:
பட்டுக்கோட்டையில் திங்கள்கிழமை இரவு வீதியில் நடந்து சென்ற மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியையிடம் 9 பவுன் சங்கிலியைப் பறித்துச் சென்ற நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.

பட்டுக்கோட்டை, மணியார்புரம் தெருவில் வசிக்கும் வழக்குரைஞர் கோதண்டராமனின் மனைவி கிருஷ்ணாம்பாள் (56). இவர் புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடியிலுள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறார்.

இவர் தினமும் காலையில் பட்டுக்கோட்டையிலிருந்து பேருந்தில் கறம்பக்குடி பள்ளிக்குச் சென்று விட்டு, மாலையில் பணி முடிந்ததும் பேருந்தில் வீடு திரும்புவாராம்.

இந்நிலையில், திங்கள்கிழமை மாலை கிருஷ்ணாம்பாள் வழக்கம் போல் கறம்பக்குடியிலிருந்து பேருந்தில் பயணித்து, இரவு 8 மணிக்கு பட்டுக்கோட்டை தலைமை அஞ்சலகம் அருகிலுள்ள பேருந்து நிறுத்தத்தில் இறங்கி, அங்கிருந்து மணியார்புரத்திலுள்ள தனது வீட்டுக்கு நடந்து சென்றுள்ளார்.

அவருடைய வீட்டருகே சென்று கொண்டிருந்தபோது பின்னால் இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் கிருஷ்ணாம்பாள் அணிந்திருந்த 9 பவுன் தாலிச் சங்கிலியைப் பறித்துச் சென்று விட்டாராம்.

இதுகுறித்து கிருஷ்ணாம்பாள் அளித்த புகாரின் பேரில் பட்டுக்கோட்டை நகர குற்றப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நன்றி: தினமணி

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...