Pages

Friday, August 5, 2016

அதிரையில் ADT நடத்திய இஸ்லாமிய மார்க்க விளக்க பொதுக்கூட்டத்தில் மவ்லவி அப்பாஸ் அலி பங்கேற்பு !

அதிராம்பட்டினம், ஆகஸ்ட் 05
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தில் அதிரை தாருத் தவ்ஹீத் [ ADT ] அமைப்பின் சார்பில் இஸ்லாமிய மார்க்க விளக்க பொதுக்கூட்டம் இன்று [ 05-08-2016 ] மாலை 7 மணியளவில் தக்வா பள்ளிவாசல் அருகில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு அதிரை தாருத் தவ்ஹீத் அமைப்பின் பொருளாளர் மீடியா மேஜிக் நிஜாமுதீன் தலைமை வகித்தார்.

கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட இஸ்லாமிய 'மார்க்க பிரசாரகர்' மவ்லவி அப்பாஸ் அலி MISc கலந்துகொண்டு 'இஸ்லாம் கட்டமைப்பது தீவிரவாதமா ? சீர்திருத்தமா ? என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். மவ்லவி நியாஸ் ஃபிர்தெளஸி, 'ஒழுக்கம் போதிக்காத கல்வி' என்ற தலைப்பில் முதன்மை உரை நிகழ்த்தினார்.

முன்னதாக அதிரை அஹமது ஹாஜா அனைவரையும் வரவேற்றார். நிகழ்ச்சி முடிவில் நன்றி கூறினார். இந்த நிகழ்ச்சியில் பெண்கள் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். பெண்களுக்கு தனியிட வசதி ஏற்பாடு செய்யப்பட்டது.

செய்தி மற்றும் படங்கள்:
கமாலுத்தீன்
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...