Pages

Tuesday, August 9, 2016

எண்ணெய் விலை இறங்கினால் விசா விலை ஏறும் - இது சவூதியில் !

அதிரை நியூஸ்:
சவூதி அரேபியா, ஆகஸ்ட் 09
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை இறங்கினால் கண்டவாறு பெட்ரோல் டீசல் விலையை ஏற்றும் நாடு நம்ம இந்தியா, இதுவே சவூதியில் விசா விலையை ஏற்ற காரணமாகியுள்ளது.

சர்வதேச அளவில் கடந்த வருடம் முதல் நிலவும் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள சவூதி அரேபியவின் வருடாந்திர பட்ஜெட்டில் சுமார் 100 மில்லியன் டாலர் அளவுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதை சமாளிக்கும் விதமாக விசா கட்டணங்களிலும் சில போக்குவரத்து விதிமீறல் அபராதங்களையும் ஏற்ற அமைச்சரவை பரிந்துரைத்துள்ளது.

இதன்படி 2 வருட பல்நுழைவு (Multiple Entry) விசாவிற்கு சுமார் 8,000 ரியால்களும், 3 மாத பல்நுழைவு விசாவிற்கு 500 ரியால்களும் நிர்ணயிக்கப்பட உள்ளன. இந்த 500 ரியால் கட்டணம் என்பது முன்பு 6 மாத பல்நுழைவு விசாவிற்கு வசூலிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும், சிவில் விமான போக்குவரத்து கட்டணத்தை கூட்டவும், சாகச பிரியர்களான சவூதியர்கள் கார் சறுக்கல் (Drifting) விளையாட்டில் ஈடுபட்டு பிடிபட்டால் அபராதம் வசூலிக்கவும் அமைச்சரவை பரிந்துரை செய்துள்ளது.

இந்த விசா விலையேற்றங்கள் வியாபார நிமித்தமாக சவூதி செல்பவர்களையும், சவூதியில் குடும்பத்துடன் வாழும் சுமார் 10 மில்லியன் வெளிநாட்டினரையும் பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Source: SPA News Agency / Msn
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...