Pages

Sunday, August 14, 2016

ஏரிபுறக்கரை ஊராட்சியில் நாளை கிராமசபைக் கூட்டம் !

தஞ்சாவூர் மாவட்டம், ஏரிபுறக்கரை ஊராட்சி உள்ளிட்ட 589 சிற்றுராட்சிகளிலும் நாளை 15-08-2016 திங்கள்கிழமை நடைபெற உள்ள கிராமசபைக் கூட்டத்தில் கலந்து கொள்ள பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் ஆ.அண்ணாதுரை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:
எதிர்வரும் 15-08-2016 திங்கள்கிழமை அன்று காலை 11 மணியளவில் தஞ்சாவூர் மாவட்டத்தில் 589 சிற்றுராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடைபெறவுள்ளது,

இக்கூட்டத்தில் கீழ்க்காணும் பொருள்கள் தொடர்பாக ஊராட்சிகளில் விவாதித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்படவுள்ளன,

பொருள் 1: ஜனவரி 2016 முதல் ஜுலை 2016 முடிய கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல்,
பொருள் 2: கிராம ஊராட்சி வளர்ச்சி திட்ட அறிக்கை,
பொருள் 3: சுகாதாரம் குடிநீர் விநியோகம் குறித்து விவாதித்தல்,
பொருள் 4: மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம்,
பொருள் 5: பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம், (ஊரகம்) 2016-2017
பொருள் 6: ஊராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு திட்டப் பணிகள் முன்னேற்றம் மற்றும் நிதி செலவின விபரங்கள் குறித்து விவாதித்தல்.
பொருள் 7: மகளிர் திட்டம்,
பொருள் 8: புதுவாழ்வு திட்டம்,
பொருள் 9: கொசுக்கள் மு்லம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதித்தல்
பொருள் 10: அனைவருக்கும் கல்வி இயக்கம்
பொருள் 11: குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு
பொருள் 12: இதர பொருட்கள்,

இக்கிராம சபைக்கூட்டத்திற்கு தஞ்சாவூர் மாவட்டத்தின் கிராம ஊராட்சிப் பகுதியில் உள்ள பொது மக்கள் அனைவரும். சுயஉதவிக்குழு உறுப்பினர்களும் பெருமளவில் கலந்து கொண்டு கிராம வளர்ச்சி பணியினை நிறைவேற்றுவது குறித்தும். கிராமத்தை சுத்தமாகவும். சுகாதாரமாகவும் வைத்துக்கொள்வது குறித்தும். தங்களது ஊராட்சி சொத்துகளை பேணி பாதுகாக்கவும். பொது நோக்கில் புதிய சாலைப் பணிகளை தேர்வு செய்திடவும். கிராமங்களில் உள்ள குடிநீர் ஆதாரங்களை விரயம் செய்யாமல் பாதுகாத்து பயன்படுத்தவும். தங்களது ஆலோசனைகளை வழங்கி கிராம வளர்ச்சிக்காக தங்களது ஒத்துழைப்பினை வழங்கிட அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...