Pages

Thursday, August 4, 2016

காதிர் முகைதீன் கல்லூரியில் உலக தாய்ப்பால் வார விழா விழிப்புணர்வு பேரணி !

அதிராம்பட்டினம், ஆகஸ்ட் 04
உலக தாய்ப்பால் வார விழாவையொட்டி தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி நாட்டு நலப்பணி திட்டம் அலகுகள் 125, 126, 127, 128 சார்பில், கல்லூரி மாணவிகள் கலந்துகொண்ட விழிப்புணர்வு பேரணி இன்று காலை நடைபெற்றது.

பேரணியை, கல்லூரி முதல்வர் முனைவர் ஏ.எம். உதுமான் முகையதீன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். நாட்டுநலப்பணி திட்ட பொறுப்பாளர்கள் முனைவர் முத்துகுமாரவேல், முனைவர் எம் பழனிவேல், பேராசிரியர் என்.சேகர், முனைவர் சாபிரா பேகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பேரணி, கல்லூரி வளாகத்திலிருந்து புறப்பட்டு, ஈசிஆர் சாலை வழியாக அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் வரை சென்றடைந்தது. இதில் தாய்ப்பாலின் மகத்துவம், குழந்தைகளுக்கு தாய்ப்பால் அளிப்பதன் அவசியம், அதனால் ஏற்படும் நன்மைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டன. பேரணியில் கல்லூரி பேராசிரியர்கள், நாட்டு நலப்பணிதிட்ட மாணவிகள் கலந்துகொண்டனர்.
 

1 comment:

  1. உலகிலேயே விலை மதிப்பில்லாத ஓர் உணவுப் பொருள் இருக்கிறது என்றால் அது தாய்ப்பால்தான்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...