Pages

Wednesday, August 10, 2016

ஸ்டாப் ! ஸ்டாப் !! விமானத்தில் ஓடிப்போய் ஏற முயன்ற பயணி !!!

அதிரை நியூஸ், ஆகஸ்ட் 10
நம்மில் பலருக்கு நகரும் பேருந்தை நிறுத்த சொல்லி ஓடிவந்து ஏறிய அனுபவம் கட்டாயம் நினைவில் இருக்கும் ஆனால் அதுவே இன்று பைக்கில் பறக்கும் இளைய சமுதாயத்திற்கு மிக அரிதாகவே இத்தகைய அனுபவம் கிடைத்திருக்கும் ஆனால் விமானத்தையே நிறுத்தச் சொல்லி ரன்வேயில் ஒடிய முதலும் கடைசியுமான நபர் இந்த பொலிவியா நாட்டு பயணியை தவிர வேறிருக்க முடியாது.

விடுமுறையில் ஸ்பெயினுக்கு பொழுதைக் கழிக்கச் சென்ற இந்த பொலிவியர் மாட்ரிட் விமான நிலையத்தில் போர்டிங் பாஸூடன் காத்திருந்தார் ஆனால் விமானத்தில் ஏறுமாறு விடுக்கப்பட்ட அழைப்பை அவர் கவனிக்கத் தவறிவிட்டார் ஒருவேளை மொழிப்பிரச்சனையாக இருக்கலாம்.

ஜெட் பிரிட்ஜ் / போர்டிங் பிரிட்ஜ் எனப்படும் இணைப்புப் பாதையிலிருந்து ரியான் ஏர் விமானம் விலகி ரன்வேயை (Tarmac) நோக்கி மெதுவாக சென்று கொண்டிருக்கையில் பொலிவியருக்கு திடீர் ஞானோதயம் பிறக்க ஆகா! நம்மை விட்டுவிட்டு விமானம் பறக்கப் போகிறதே என்ற அங்கலாய்ப்பில் அனைத்து பாதுகாப்பு அரண்களையும் எப்படியோ மீறி சுமார் 10 அடி உயர பாலத்திலிருந்தும் குதித்து விமானத்தை நோக்கி ஒடினார், கையில் 2 பேக்குகள் வேறு.

உஷாரான ஏர்போர்ட் அதிகாரிகள் அவரையும் பிடித்து, விமானத்தையும் நிறுத்தி ஒருவழியாக வழக்கும் பதிந்து கொண்டு அதே விமானத்திலேயே அனுப்பி வைத்தனர் ஆனால் அவருடைய இந்த வரம்பு மீறிய செயலுக்காக மிகப்பெரிய அபராதம் காத்திருக்கிறதாம்,

நல்லவேளை அவசரப்பட்டு தீவிரவாதி பட்டம்கட்டி சுட்டுக் தொலைக்கவில்லை.

Source: Mail Online
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...