Pages

Thursday, August 4, 2016

பட்டுக்கோட்டை தென்னை நாற்றங்கால் மையத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு !

பட்டுக்கோட்டை, ஆக. 4:
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையில் அமைந்துள்ள மாநில தென்னை நாற்றங்கால் மற்றும் தென்னை ஒட்டுப் பணி மையத்தில் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அ. அண்ணாதுரை இன்று ( வியாழக்கிழமை ) ஆய்வு மேற்கொண்டார்.

பட்டுக்கோட்டையில் தயாரிக்கப்படும் வாளிப்பான தென்னங்கன்றுகளுக்கு விவசாயிகள் மத்தியில் மிகுந்த வரவேற்பு உள்ளது. இங்கு உற்பத்தி செய்யப்படும் நெட்டை, நெட்டை-குட்டை தென்னங்கன்றுகளுக்காகவே தாய் மர விவசாயிகள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து நன்கு முற்றிய, விரைவில் முளைப்புத் திறன் கொண்ட நெற்றுகள் கொள்முதல் செய்யப்படுகின்றன.

இவ்வாறு கொள்முதல் செய்யப்படும் தென்னை நெற்றுக்கள் காற்றுப்பதம், மணல் பதம் ஆகியவற்றின் மூலம் பதப்படுத்தப்பட்டு, பின்பு நாற்றங்காலில் நடப்பட்டு, விரைவில் ஏடு பிரிந்து, நன்கு வளர்ந்த 6 மாத வயதுடைய தென்னங்கன்றுகள் மட்டுமே தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வேளாண் விற்பனை மையங்கள் மூலம்  விற்பனை செய்யப்படுகிறது என்ற விவரத்தை வேளாண் அலுவலர்கள் மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்தனர்.

மேலும், இங்கு நெட்டை-குட்டை மற்றும் குட்டை-நெட்டை ஒட்டுப் பணி செயல்பாடுகள், அதற்கான தொழில்நுட்பங்கள் ஆகியன குறித்தும் ஆட்சியர் வேளாண் அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.  

பின்னர் ஆட்சியர் கூறுகையில், விவசாயிகள் அதிக அளவில் இளநீருக்கான குட்டை ரக கன்றுகளை நட வேண்டும். இளநீர் தேங்காய் மூலம் விவசாயிகள் அதிக லாபம் பெறலாம் என்பதால் குட்டை ரக கன்றுகளை அதிக அளவில் உற்பத்தி செய்யுமாறு வேளாண் அலுவலர்களுக்கு ஆட்சியர் அறிவுறுத்தினார்.

ஆய்வின்போது, தஞ்சாவூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் ஆர். கிருஷ்ணகுமார்,  மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்  பி. சொக்கலிங்கம், வேளாண்மை  துணை இயக்குநர் (மத்திய திட்டம்) என். இளஞ்செழியன், வேளாண்மை துணை இயக்குநர் (மாநிலத் திட்டம்) (பொ) எஸ். ஈஸ்வர், வேளாண்மை உதவி இயக்குநர் (தரக்கட்டுப்பாடு) ஜி. வித்யா, வேளாண்மை உதவி இயக்குநர் (பொ) எஸ். வெங்கடாசலம், வேளாண்மை அலுவலர்கள் ஆர். சாருமதி, எஸ். மாலதி, எஸ். சங்கீதா ஆகியோர் உடனிருந்தனர்.  

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...