Pages

Wednesday, August 10, 2016

காதிர் முகைதீன் கல்லூரியில் ஒருநாள் பன்னாட்டு கருத்தரங்கு !

அதிராம்பட்டினம், ஆகஸ்ட் 10
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி வணிகவியல், வணிக ஆட்சியியல் மற்றும் பொருளாதாரத் துறைகள் சார்பாக பன்னாட்டு கருத்தரங்கம் நிகழ்ச்சி வணிகவியல், வணிக ஆட்சியியல் மற்றும் பொருளாதாரத் துறையில் ஏற்பட்டுள்ள சமீப மாற்றங்கள், சவால்கள், நுணுக்கங்கள் மற்றும் புத்தாக்க பயிற்சிகள் என்ற தலைப்பில் இன்று 10.08.2016  காலை கல்லூரி கலையரங்கில் நடைபெற்றது.

இதில் 200க்கும் மேற்பட்ட முதுநிலை மாணவர்கள், 40க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் கலந்துகொண்டு ஆராய்ச்சி கட்டுரைகளை சமர்ப்பித்தார்கள். சிறந்த ஆராய்ச்சி கட்டுரைக்கு பரிசு வழங்கப்பட்டது.

எத்தியோப்பியா ஆம்போ பல்கலைக்கழகத்தில் கூட்டுறவு மேலாண்மை துறை பேராசிரியர் முனைவர் நக்கீரன், இலங்கை யாழ்பாணம் பல்கலைக்கழகத்தில் கணக்குப்பதிவியல் துறை பேராசிரியர் முனைவர் நிமலதாசன் ஆகியோர் கலந்து கொண்டு கருத்தரங்கு தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள். துல்லியமான எடுத்துக்காட்டுகளுடன் மிகச்சிறப்பாக தங்கள் கருத்துக்களை மாணவர்களின் மனதில் பதிய வைத்தனர். இந்த கருத்தரங்கு மாணவர்களின் எதிர் காலத்தில் மேற்கொள்ளும் சவால்களை சந்திப்பதற்கு மிகவும் உறுதுணையாக இருக்கும்.

கருத்தரங்கு ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் முனைவர் ஏ.எம் உதுமான் முகையதீன், கருத்தரங்கு அமைப்புக்குழு இயக்குநர் முனைவர் சாகுல் ஹமீது, ஒருங்கிணைப்பாளர் முனைவர். பி.சிலார் முகம்மது, அமைப்பு செயலாளர் மேஜர் முனைவர். எஸ்.பி. கணபதி ஆகியோர் செய்தனர்.

கருத்தரங்கு நிகழ்வுகளை வணிக ஆட்சியியல் பேராசிரியர் முனைவர். முகமது சித்திக் தொகுத்து வழங்கினார். முடிவில் வணிக ஆட்சியியல் துறைத் தலைவர் முனைவர். ஹாஜா முகைதீன் நன்றி கூறினார்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...