Pages

Monday, August 8, 2016

காதிர் முகைதீன் கல்லூரியில் வேலை வாய்ப்பு பயிற்சி முகாம் !

அதிராம்பட்டினம், ஆகஸ்ட் 08
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரியில் வேலை வாய்ப்பு பயிற்சி முகாமில் கலந்துகொண்டு பயனடைய மாணவர்களுக்கு அழைப்பு விடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக காதிர் முகைதீன் கல்லூரி முதல்வர் முனைவர் ஏ.எம் உதுமான் முகையதின் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி தொழில் வழிகாட்டி மற்றும் வேலை வாய்ப்பு மையம் [ Career Guidance and Placement Cell ] நடத்தும் முதுகலை மற்றும் இளங்கலை இறுதி ஆண்டு பயிலும் மாணவர்களுக்கான வேலை வாய்ப்பு பெற திறனை மேம்படுத்துவதற்கு வழிகாட்டும் வகையில் செயல் விளக்க பயிற்சி முகாம் நடைபெற உள்ளது.

இதில் கலந்துகொள்ள விருப்பமுள்ள மாணவர்கள், தங்கள் பெயரினை 21-08-2016 க்கு முன்பாக அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி அலுவலகத்தில் பதிவு செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். என இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...