Pages

Sunday, August 14, 2016

தஞ்சை மாவட்ட முன்னாள் ஆட்சியருக்கு முதல்வரின் நல் ஆளுமை விருது

மகாமகத் திருவிழாவை சிறப்பாக நடத்தியதற்காக, தஞ்சை மாவட்ட முன்னாள் ஆட்சியர் என்.சுப்பையனுக்கு, சுதந்திர தினத்தன்று விருது வழங்கப்பட உள்ளது.

சிறப்பான முறையில் மக்களுக்கு அரசு சேவைகளை வழங்கும் அதிகாரிகள், துறைகளுக்கு முதலமைச்சரின் நல் ஆளுமை விருது ஆண்டுதோறும் சுதந்திர தினத்தன்று வழங்கப்படுகிறது.

இந்த ஆண்டு மகாமகத் திருவிழாவை எந்தவித பிரச்னையும் இல்லாமல் சிறப்பான முறையில் நடத்தியமைக்காக, தஞ்சை மாவட்ட ஆட்சியர் என்.சுப்பையனுக்கு முதலமைச்சரின் நல் ஆளுமை விருது வழங்கப்பட உள்ளது.

இந்த விருதை, திங்கள்கிழமை நடைபெறவுள்ள சுதந்திர தின விழாவில் முதல்வர் ஜெயலலிதா வழங்கவுள்ளார். தஞ்சை மாவட்ட ஆட்சியராக இருந்த சுப்பையன், அண்மையில் வேலைவாய்ப்பு-பயிற்சித் துறை இயக்குநராக மாற்றப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...