Pages

Thursday, August 4, 2016

தவிக்கும் இந்தியர்களுக்கு உதவிக்கரம் நீட்டிய சவூதி அரசு !

அதிரை நியூஸ்,
சவூதி அரேபியா ஆகஸ்ட் 04
சர்வதேச சந்தையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக நிலவும் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியால் சவூதியில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்த நிலையினால் பெட்ரோலிய துறைசார்ந்த கட்டுமான நிறுவனங்கள் பல இழுத்து மூடப்பட்டு வருகின்றன, அதில் ஒன்று சவூதியில் ஜாம்பவான் நிறுவனங்களில் ஒன்றாக திகழ்ந்த 'சவூதி ஓஜர்'

சவூதி ஓஜர் கம்பெனி மூடப்பட்டதால் இந்தியா, பாகிஸ்தான், பங்காளதேஷ், சிறீலங்கா, பிலிப்பைன்ஸ் போன்ற பல ஆசிய நாடுகளை சேர்ந்த தொழிலாளர்கள் வேலை இழந்ததுடன் பல மாதங்களாக சம்பளம் வழங்கப்படாததால் உணவு இல்லாமலும் ஊர் திரும்ப வழியில்லாமலும் தவித்து வருகின்றனர். இதில் சற்றேரக்குறைய 2500 பேர் மட்டுமே இந்தியர்கள் என்றும் செய்திகளில் அடிபடுவது போல் 10000 பேர் இல்லை என்றும் சவூதி அரசு மறுத்துள்ளது.

தொழிலாளர் பிரச்சனை விஸ்வரூபம் எடுத்துள்ளதை அடுத்து இந்திய அரசும் களத்தில் குதித்துள்ள நிலையில், பரிதவிக்கும் தொழிலாளர்களுக்கு உணவு, மின்சாரம், மருத்துவ வசதி மற்றும் தங்குமிட வசதிகளை ஏற்படுத்தி தந்துள்ளதுடன் விரும்பும் தொழிலாளர்களை சவூதி அரசின் செலவில் இலவசமாக அனுப்பி வைக்கவும் ஏற்பாடு செய்துள்ளது.

மேலும் சிறப்பு சலுகையாக விரும்புகின்ற தொழிலாளர்கள் வேறு கம்பெனிகளில் சேர்ந்து விசா மாற்றிக் கொள்ளவும் இசைவு தெரிவித்துள்ளதாக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் முபரஜ் அல் ஹக்பானி அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

கடைசியாக கிடைத்த (04.08.2016) தகவலின்படி, பரிதவிக்கும் இந்தியர்களுக்கு தேவையான உதவிகள் செய்து விரைவாக திருப்பியனுப்ப சிறப்பு அதிகாரிகளை நியமித்து மன்னர் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Source: AL OKAZ
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...