Pages

Wednesday, August 3, 2016

பட்டுக்கோட்டையில் சரக்கு லாரி மோதி இளைஞர் பரிதாப பலி !

பட்டுக்கோட்டை, ஆக. 03
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள தாமரங்கோட்டை ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்தவர் அண்ணாத்துரை. இவரது மகன் அருண்குமார். இன்று மதியம் இவர் தஞ்சை சாலையில் வந்து கொண்டிருந்த போது லாரிகளில் சரக்கினை மொத்தமாக ஏற்றிவந்து நகரில் காலை முதல் இரவு வரை கடைகளில் சில்லரையாக சரக்குகளை இறக்குவதுடன் நகரில் போக்குவரத்து நெரிசலையும், விபத்தினையும் ஏற்படுத்தி வரும் சில்லரை சரக்கு லாரி வழக்கம் போல கடைகளில் சரக்கினை இறக்கிவிட்டு எதிரே இரு சக்கர வாகனத்தில் வந்தவரை கவணிக்காமல் மோதியதாக கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து அருண்குமார் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்து போனார். லாரி ஓட்டி வந்தவர் லாரியை அங்கேயே விட்டுவிட்டு தப்பி ஓடினார்.

பெரும்பாலும் பட்டுக்கோட்டை நகரில் திருச்சி, மதுரை மற்றும் சென்னையில் இருந்து சில்லரை சரக்குகளை இறக்கும் லாரிகள் நாள் ஒன்றிற்கு 20க்கும் மேற்பட்ட லாரிகள் வருகின்றன. அந்த லாரிகளை லைசன்ஸ் இல்லாத லோடுமேன்கள் தான் பெரும்பாலும் ஓட்டுகின்றனர். காரணம் நகர மக்களின் எதிர்ப்பை, சரிக்கட்டுவதற்கு லோடுமேன்கள் லாரிகளை ஓட்டுகின்றனர் லாரி ஓட்டுநர்கள் லாரி புரோக்கர் செட்டுகளில் ஓய்வெடுத்துகொள்வார்கள். இவர்கள் மீது போக்குவரத்து காவல்துறை கடும் நடவடிக்கை எடுத்தால் ஒழிய இது போன்ற விபத்துக்களையும், போக்குவரத்து நெரிசலையும் தவிர்க்க முடியாது என நகரவாசிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

செய்தி மற்றும் படங்கள்:
'நிருபர்' ஐ.எம் ராஜா, பட்டுக்கோட்டை
 

1 comment:

  1. அதிரை நகரிலும் இதே அவல நிலைதான், கடுமையாக ஒடுக்க வேண்டும்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...