Pages

Wednesday, August 10, 2016

உயிர் தோழி வைத்த உலை !

அதிரை நியூஸ், ஆகஸ்ட் 10
உயிர் தோழிகள் இருவரில் ஒருவருக்கு முதலில் திருமணம் முடிய, வயிற்றெரிச்சலில் விழுந்த மற்றொருத்தி தோழியின் திருமண பந்தத்தை உடைக்க பல சித்து விளையாட்டுக்களை விளையாடி தோற்றுள்ளார்.

கடைசியாக, இன்னொரு தோழியின் உதவியுடன் திருமணமான தோழியின் சமூக வலைத்தள கணக்குகளுக்குள் கள்ளத்தனமாக (Hack) ஊடுருவி, அசிங்கமான படங்களையும் செய்திகளையும் தொடர்ந்து பதிவேற்ற அவள் நினைத்தது போலவே கணவன் மனைவிக்கிடையே பஞ்சாயத்து வைக்கும் அளவுக்கு பிரச்சனைகள் எழுந்துள்ளன.

ஒருவழியாக யாரோ தங்களுடைய வாழ்க்கையில் 'விபரீதமாக' விளையாடுகிறார்கள் என உணர்ந்த தம்பதியர் துபாய் ஸைபர் கிரைம் போலீஸாரின் உதவியை நாட, உயிர்த்தோழியின் குட்டு வெளிப்பட்டு தற்போது போலீஸாரின் பிடியில்.

ஒருவேளை இவள் டிவி சீரியல் பார்க்கிற தோழியா இருக்குமோ!

மணப்பெண்ணை பார்த்து தெறித்து ஓடிய மணமகன்
முஸ்லீம்கள், காப்டிக் கிருஸ்தவர்கள், நாத்திகர்கள் என பலதரப்பட்ட மக்கள் வாழும் எகிப்து தேசத்தை சேர்ந்த ஒருவர் தனது நண்பரின் வேண்டுகோளை ஏற்று அவரது சகோதரிக்கு பெண் தேட உதவியர் கடைசியில் அவரே மணமகனாகிப் போனார். ( ஒருவேளை கல்யாணத்தை போனில் பண்ணியிருப்பார்களோ? )

தனது மனைவியை போட்டோவில் மட்டுமே பார்த்திருந்த மணமகன் கடைசியில் மணமகள் பணிபுரியும் சவூதிக்கே சென்று சந்திக்க ஏர்போர்ட்டில் காத்திருக்க, மணமகளை கண்ட மாப்பிள்ளை ஓடிப்போய் கரம் கோர்ப்பதற்கு பதிலாக தெறித்து ஓடத்துவங்கியுள்ளார்.

திருடன் என நினைத்த பிற பயணிகள் மணமகனை பாய்ந்து பிடிக்க மணமகள் வந்து அவர் தனது கணவர் எனக்கூறி காப்பாற்றி சென்றுள்ளார் என்றாலும் மணமகள் எகிப்து கோர்ட்டில் தற்போது விவாகரத்துக்கு விண்ணப்பித்துள்ளார். வழமைபோல் சவூதி மற்றும் எகிப்திய பத்திரிக்கைகள் இதற்கு மேல் வாய் திறக்கவில்லை.

Source: Emirates 247
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...