Pages

Tuesday, August 16, 2016

புனரமைப்பு பணியில் அதிராம்பட்டினம் ஷிஃபா மருத்துவமனை !

தஞ்சை மாவட்டம் கடற்கரை நகரம் அதிராம்பட்டினம், அதிகாலையிலேயே தொழுகைக்கு அழைக்கும் பாங்கொலியால் விழிக்கும் ஊர். சேது பெருவழிச்சாலையை ஒட்டி அமைந்துள்ளது. ஏறக்குறைய 70 ஆயிரம் மக்கள் தொகையைக் கொண்டுள்ளது.

இப்பகுதியை சுற்றி ஏரிப்புறக்கரை, கீழத்தோட்டம், ராஜாமடம், மகிழ்ங்கோட்டை, தொக்காலிக்காடு, பழஞ்சூர், மளவேனிக்காடு, ராசியங்காடு, நடுவிக்காடு, விலாரிக்காடு, உள்ளூர் புதுக்கோட்டை, கருங்குளம், மாளியக்காடு, சேண்டாக்கோட்டை, பள்ளிகொண்டான், முதல் சேரி, நரசிங்கபுரம் ஆகிய கிராமங்களை பெற்றிருந்தும் அனைத்து வசதிகளுடன் கூடிய மருத்துவமனை இல்லாதது பெரும் குறையாக காணப்பட்டது.

அவசரகால மருத்துவத்திற்காக பெரும் சிரமத்துடன் தொலைதூரத்தில் உள்ள ஊர்களுக்கு குறிப்பாக திருச்சி, தஞ்சை, கும்பகோணம், மன்னார்குடி, பட்டுக்கோட்டை போன்ற பகுதிகளுக்கு செல்லக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டுவிடுகிறது.

கடந்த 27 ஆண்டுகளுக்கு முன்பு அதிரை - பட்டுக்கோட்டையின் பிரதான சாலையில் பரந்த பகுதியில் அனைத்து வசதிகளுடன் கூடிய அதிரையின் மிகப்பெரிய மருத்துவமனையாக ஷிஃபா உருவாகியது. இங்கு பசுமையுடன் காணப்படும் அமைதிச்சூழல், தாராளமான இட வசதி, தேவையான மருத்துவ உபகரணங்கள், மருந்தகம், செவிலியர் சேவை, அறுவை சிகிச்சைக்கூடம், பரிசோதனைக்கூடம் ஆகிய வசதிகளோடு நோயாளிகள் தங்குவதற்கு தனி மற்றும் பொதுவான அறைகள் உள்ளிட்டவை மிகப்பெரிய நிலப்பரப்பில் குறிப்பாக தஞ்சை அளவில் எந்தவொரு மருத்துவமனையும் பெற்றிராத சிறப்பை நமது மருத்துவமனை பெற்று இருந்தாலும், மருத்துவமனை பராமரிப்பு, மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களுக்காக செலவிடப்படும் தொகைக்கு ஏற்ப நோயாளிகளின் வருகை போதுமானதாக இல்லை.

அதிராம்பட்டினம் பகுதி மக்கள் நாள் ஒன்றுக்கு மருத்துவத்திற்காக செலவீடப்படும் தொகை சராசரியாக ரூ. 3 இலட்சம் முதல் ரூ. 4 இலட்சம் வரை இருப்பதாக கணக்கிடப்படுகிறது. இந்த தொகை முழுவதும் வெளியூர்களில் இயங்கிக் கொண்டிருக்கக்கூடிய மருத்துவமனைகள் மற்றும் பரிசோதனை நிலையம் அதனைச் சார்ந்த டாக்டர்களுக்கு சென்று விடுகின்றன.

அதே போல் குழந்தை மருத்துவத்திற்காகவும், பிரசவத்திற்காகவும் தங்களின் நேரத்தையும், வலியையும் பொருட்படுத்தாது 60 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மருத்துவமனைக்குச் செல்லும் தாய்மார்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனைத்து மருத்துவ வசதிகள் இருப்பதை மறந்து விடுகின்றனர்.

மருத்துவமனைக்கு புதிதாக வருகின்ற டாக்டர்களும் நிரந்தரமாக தங்கி பணிபுரியாமல் வந்த சில மாத காலங்களிலேயே மருத்துவமனையை விட்டுச்சென்று விடுவதும், கூடவே வாடிக்கையான நோயாளிகளையும் அழைத்துக்கொண்டு சென்று விடுவதாக கூறப்படுகிறது.

அதிரையில் தற்போது இரவு நேரத்தில் நோய்வாய்ப்பட்டவர்களுக்கு மருத்துவ முதலுதவி என்பது பெரும் குறையாகவே காணப்படுகின்றன. குறிப்பாக இரவு நேரங்களில் மருத்துவர்கள் கண் விழித்து நோயாளிகளுக்கு சிகிச்சை மேற்கொள்வது என்பது அரிதாகவே உள்ளது. மேலும் இப்பகுதியில் அமைந்துள்ள சேது பெருவழிச்சாலையில் அடிக்கடி வாகன விபத்துகளும் நடந்து வருகின்றன. விபத்தில் பாதிக்கப்பட்டோரை அவசர சிகிச்சைக்காக நீண்ட தூரத்தில் உள்ள மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லும் போதே உயிர் இழப்புகளும் ஏற்பட்டு விடுகின்றன.

இந்நிலையில் அதிரை ஷிஃபா மருத்துவமனையின் மூலம் அதிரை மற்றும் சுற்றுவட்டார பகுதி பொதுமக்களுக்கு தரமான சிகிச்சையை வழங்குவது தொடர்பாக ஷிஃபா மருத்துவமனையை நிர்வகித்து வரும் ARDA ( Adirai Rural Development Association ) தீவிர ஆலோசனையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஈடுபட்டது. இதில் நிதி பற்றாக்குறை, மருத்துவர்கள் மற்றும் பராமரிப்பாளர்கள் பற்றாக்குறை ஆகியவற்றில் சிக்கியுள்ள ஷிஃபா மருத்துவமனையை நிர்வகிக்க மருத்துவ துறை தொடர்புடையவர்களிடம் ஒப்படைக்க முடிவு எடுக்கப்பட்டது. இதன் மூலம் கிடைக்கும் வருவாயை சமுதாயத்தில் பின்தங்கியுள்ள மக்களுக்கு பயன்படுத்த திட்டமிட்டு இருந்தனர்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக ஷிஃபா மருத்துவனையை புதுப்பொழிவுடன் மாற்றுவதற்காக புனரமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
 

1 comment:

  1. insha allah, if this hospital starts functioning, a huge amount of Adiraites will be saved from going to other cities for treatment.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...