Pages

Tuesday, August 9, 2016

அதிராம்பட்டினத்தில் கல்லூரி பேராசிரியர்கள் நடத்திய வாயில் முழக்கப்போராட்டம் !

அதிராம்பட்டினம், ஆகஸ்ட் 09
தமிழக அரசின் உயர்கல்வித்துறை பிறப்பித்துள்ள அரசாணையை திரும்ப பெற வலியுறுத்தி பல்கலைகழக ஆசிரியர் சங்கம், தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி கிளை சார்பில் கல்லூரி வாயில் முன்பாக முழக்கப்போராட்டம் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

முழக்கப்போராட்டத்திற்கு பல்கலை கழக ஆசிரியர் சங்க அதிராம்பட்டினம் தலைவர் எஸ். ராஜா முகமது தலைமை வகித்தார். செயலாளர் கே. முருகானந்தம், பொருளாளர் அல் ஹாஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பல்கலைகழக பேரவை மற்றும் ஆட்சிமன்ற குழு உறுப்பினர்கள் பதவிகளுக்கு போட்டியிடும் கல்லூரி முதல்வர் மற்றும் பேராசிரியர்கள் அரசின் முன்அனுமதி பெற வேண்டும் என தமிழக அரசின் உயர்கல்வித்துறை பிறப்பித்துள்ள அரசாணையை கண்டித்தும், இவற்றை திரும்ப பெற கோரியும், இதுநாள் வரை உள்ள நடைமுறையை பின்பற்ற வலியுறுத்தி முழக்கப்போராட்டம் நடைபெற்றது.

இந்த போராட்டத்தில் சங்க உறுப்பினர்கள், தமிழ்நாடு அரசு உதவி பெரும் கல்லூரி ஆசிரியரல்லாப் பணியாளர் சங்க உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 

1 comment:

  1. தமிழக அரசின் உயர்கல்வித்துறை பிறப்பித்துள்ள அரசாணையை திரும்ப பெற கோரி பல்கலைகழக ஆசிரியர் சங்க உறுப்பினர்கள் போராட்டம் நடத்துகிறார்கள். என்னவகையான அரசாணை பிறப்பித்துள்ளது., அதனை ஏற்றுக்கொள்ள முடியாவிட்டால் ரிசைன் பண்ணிட்டு வேலையில்லாதவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கலாம். அதிகமாக கட்டணம் வசூலிக்கிறார்களே அதற்க்கு ஏதாவது போராட்டம் உண்டா? தூய்மை இந்தியா திட்டம் என்று சொல்லி விழா நடத்தினார்கள் கல்லூரி சுற்றி அவ்வளவு சுத்தம் ....???

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...