Pages

Tuesday, August 9, 2016

பட்டுக்கோட்டையில் தலையில் கல்லை தூக்கிப்போட்டு பூ வியாபாரி படுகொலை !

பட்டுக்கோட்டை, ஆக. 9:
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையில் தலையில் கல்லைப் போட்டு பூ வியாபாரியைக் கொன்றதாக மற்றொரு பூ வியாபாரியை போலீஸார் தேடி வருகின்றனர்.

பட்டுக்கோட்டை சுண்ணாம்புக்காரத் தெரு, ஆற்றங்கரைப் பகுதியைச் சேர்ந்த நாகராஜன் மகன் பிரகாஷ் (23). பூ வியாபாரியான இவருக்கு மனைவி, 2 வயது ஆண் குழந்தை உள்ளனர்.

பிரகாஷுக்கும், அதே தெருவைச் சேர்ந்த மற்றொரு பூ வியாபாரியான ஆர். கார்த்திக் என்பவருக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்ததாம்.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை பிற்பகல் பட்டுக்கோட்டை, கோட்டை சிவன் கோவில் பிரிவுச் சாலையில் நின்ற பிரகாஷுக்கும், அந்த வழியாகச் சென்ற கார்த்திக்குக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டதாம்.

இதனால் ஆத்திரமடைந்த கார்த்திக் பிரகாஷை கீழேத் தள்ளி தாக்கியுள்ளார். பின்னர் அருகில் கிடந்த கருங்கல்லை தூக்கி வந்து பிரகாஷ் தலையில் போட்டு விட்டு ஓடி விட்டாராம். இதில் பலத்த காயமடைந்த பிரகாஷ் அதேயிடத்தில் உயிரிழந்தார்.

இது குறித்து அவரது தந்தை நாகராஜன் அளித்த புகாரின் பேரில் பட்டுக்கோட்டை நகர போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர். 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...