Pages

Saturday, August 6, 2016

தஞ்சை மாவட்டத்தில் மீன்வளர்க்க ஆர்வமுள்ள விவசாயிகளுக்கு மானியம் !

தஞ்சாவூர், ஆகஸ்ட் 06
தஞ்சாவூர் மீன்வளத்துறை சார்பில் மீன்வளர்க்க ஆர்வமுள்ள விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படும் என தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணாதுரை அவர்கள் தகவல் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக இன்று வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:
தஞ்சாவூர் மீன்வளத்துறை மூலம் 2016-17ம் ஆண்டு தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் ஒரு ஹெக்டேரில் ரூ. 5 இலட்சம் செலவில் சொந்த நிலத்தில் மீன் வளர்ப்பு குளங்கள் அமைப்பவர்களுக்கு அதிகபட்சமாக ஒரு ஹெக்டேருக்கு ரூ.2 இலட்சம் மற்றும் மீன்குஞ்சுகள் வாங்குவதற்கு ரூ.10 ஆயிரம் ஆக மொத்தம் ரூ.2 இலட்சத்து 10 ஆயிரம் பின்னிலை மானியமாக ( Backended subsidy ) வழங்கப்படும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.  எனவே ஒரு ஹெக்டேரில் மீன்வளர்ப்பு குளங்கள் அமைக்க விரும்பும் மீன்வளர்ப்பு விவசாயிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

மீன்வளர்ப்பு குளங்கள் புதியதாக அமைக்க பயனாளி சொந்த நிலம் அல்லது 10 வருட குத்தகைக்கு பெற்ற நிலம் வைத்திருக்க வேண்டும். விண்ணப்பங்கள் விவசாயிகளிடமிருந்து அதிகம் பெறப்படின், முன்னுரிமை அடிப்படையில், தகுதியின் அடிப்படையில் பயனாளிகள் தேர்வு செய்யப்படுவார்கள்.

மேற்படி திட்டத்தில் பயன் பெற விருப்பமுள்ளவர்கள் தஞ்சாவூர் 873/4
கீழவாசல், அண்ணா சாலை எனும் முகவரியில் உள்ள மீன்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தினை நேரில் தொடர்பு கொண்டு உரிய விண்ணப்பப் படிவம் பெற்றுக் கொள்ளலாம்.  மேலும், மாவட்ட இணைய தளத்தில்   www.thanjavur.nic.in லிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.இவ்வாறு மாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணாதுரை அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...