Pages

Friday, August 26, 2016

துபாயில் வசிப்பவர்களுக்கு இலவச சட்ட ஆலோசணை மையம்

அதிரை நியூஸ்:
துபாய் 26 ஆகஸ்ட்,
துபாயின் சமூக நல அபிவிருத்தி ஆணயமும் (The Community Development Authority - CDA) & Al Obaidli and Al Zarouni Advocates and Legal Consultants office எனும் தனியார் சட்ட ஆலோசணை குழுவினரும் இணைந்து 'Legal Clinic' எனும் இலவச சட்ட ஆலோசணை மையத்தை அனைத்து துபைவாசிகளுக்காக ஏற்படுத்தியுள்ளனர்.

வழக்கறிஞர்களை பொறுத்து 750 திர்ஹம் முதல் 5000 திர்ஹம் வரை சட்ட ஆலோசணைகளுக்காக வசூலிக்கப்பட்டு வரும் நிலையில், பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ளோருக்கு மிகவும் பயனுள்ளதாகவும் குழந்தைகள் பாதுகாப்பு (Child Protection Act) மற்றும் தனிமனித உரிமை சட்டங்கள் (Personal Status Law) குறித்து சமூக விழிப்புணர்வு ஏற்பட இந்த Legal Clinic எனும் இலவச சட்ட ஆலோசணை மையங்கள் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் திருமணம், விவாகரத்து, தனித்துவம் (identity), சொத்து விவகாரங்கள் (inheritance), குழந்தைகள் விவகாரம் (child support) என குடும்ப விஷயங்கள் குறித்து ஆலோசணை தரப்படும் என்று 'அல் ஒபைதலி மற்றும் அல் ஜரூனி வழக்கறிஞர்கள் மற்றும் சட்ட ஆலோசணை அலுவலகம் தெரிவித்துள்ளது.

இன்னும் பல சட்ட அலுவலகங்களையும் இத்திட்டத்தில் இணைக்க பேச்சுவார்த்தைகள் நடத்தி வருவதாகவும் சமூக நல அபிவிருத்தி ஆணையம் தெரிவித்துள்ளது.

சமூக நல அபிவிருத்தி ஆணையத்தை சிறியதொரு விண்ணப்பத்தை பூர்த்தி செய்து மின்னஞ்சல் வழியாக அனுப்புவதன் மூலம் அல்லது அதற்கான தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்வதன் வழியாக வழக்கறிஞர்களின் சட்ட ஆலோசணை மையத்திலிருந்து தேவையான ஆலோசணைகள் பெற்றுத் தரப்படும்.

இலவச சட்ட ஆலோசணை தொடர்புகளுக்கு:

Legal Clinic (for all residents of Dubai)

Hotline: 800-3232 / email: legalclinic@cda.gov.ae

-நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...