Pages

Wednesday, August 3, 2016

பிரபல நிறுவனம் தயாரித்துள்ள செருப்பில் கருப்பினத்தவர் உருவம்: நிறவெறியுடன் செயல்படுவதாக புகார் !

பேராவூரணி ஆகஸ்ட் 3-
கேரளாவில் தயாரித்து இந்தியா எங்கும் தனது விற்பனையால் சிறப்பான இடத்தை பெற்றுள்ள வீ.கே.சி நிறுவனம் தயாரித்து வெளியிட்டுள்ள ஹவாய் செருப்பில் கருப்பினத்தவர் படம் அச்சிடப்பட்டுள்ளது. இது நிறவெறியை ஊக்குவிப்பதாக புகார் எழுந்துள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி புதுரோடு பகுதியை சேர்ந்தவர் கவிஞர் ஏ.தெ.சுப்பையன். கவிஞரும், எழுத்தாளருமான இவர் சில தினங்களுக்கு முன்பு, பேராவூரணியில் உள்ள ஒரு செருப்பு விற்பனை செய்யும் கடையில், செருப்பு ஒன்றினை வாங்கியுள்ளார்.

தற்செயலாக அதனை கவனித்த போது, அதில் ஒரு ஆங்கிலக் கவிதையும், கருப்பினத்தவர் படமும் அச்சிடப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக தான் வாங்கிய செருப்பை தான் வாங்கிய கடையிலேயே திரும்ப ஒப்படைத்தார்.

இதுகுறித்து கவிஞர் ஏ.தெ.சுப்பையன் தெரிவித்ததாவது,
"அமெரிக்காவில் பிரபலம் ஒருவர் வளர்த்து வந்த நாய்க்கு இந்தியா என பெயர் சூட்டி இருந்தது கடும் சர்ச்சைக்குள்ளானது. பீர் பாட்டில், செருப்புகளில் ஏற்கனவே கடவுளர்கள் படங்கள் அச்சிடப்பட்டு சர்ச்சைகள் ஏற்பட்டுள்ளது. இந்த நிறுவனம் தற்போது தயாரித்து வெளியிட்டுள்ள செருப்பில் கருப்பினத்தவர் உருவம் அச்சிடப்பட்டுள்ளது. இந் நிறுவனம் நிறவெறியோடு செயல்படுவதாக கருத தோன்றுகிறது. எனவே செருப்பு தயாரிப்பு நிறுவனம், கருப்பினத்தவரை இழிவுபடுத்தும் விதமாக வெளியிட்டுள்ள செருப்பை, விற்காமல் திரும்பப் பெறவேண்டும். ஜனநாயக சக்திகள் இதற்கு குரல் எழுப்ப வேண்டும்" என்றார்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...