Pages

Tuesday, August 9, 2016

பட்டுக்கோட்டையில் வழக்கறிஞர் சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டம் !

பட்டுக்கோட்டை, ஆகஸ்ட் 09
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வழக்கறிஞர்கள் சங்கத்தினர் சார்பாக இன்று நீதிமன்றம் முன்பாக உண்ணாவிரத போராட்டம் நடத்தப்பட்டது.

இந்த உண்ணாவிரத போராட்டம் இன்று காலை முதல் மாலை வரை மற்றும் நாளை காலை முதல் நாளை மாலை வரை நடத்த திட்மிட்டுள்ளனர். சமீபத்தில் தமிழ்நாடு உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட சட்டங்களை எதிர்த்து தொடரும் போராட்டத்தின் ஒரு பகுதியாக இந்த உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படுகிறது.

இந்த போராட்டம் பற்றிய விளக்கத்தினை துண்டு பிரசுரமாக அடித்து பொதுமக்களிடம் தங்கள் போராட்டத்திற்கான காரணம் பற்றி விளக்கினர். அந்த துண்டு பிரசுரத்தில் , நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் கைநீட்டியோ, புருவத்தை உயர்த்தியோ, சத்தமாகவோ பேசக்கூடாது. நீதிபதிகள் மீது எவ்வித புகாரும் மேலமை நீதி மன்றத்தில் செய்யக்கூடாது. ஏதேனும் ஒரு வழக்கில் நீதிபதிக்கு லஞ்சம் கொடுக்க வேண்டும் என வழக்கறிஞர் சொல்லியதாக யாரேனும் புகார் தெரிவித்தால் வழக்கறிஞர் மீது நடவடிக்கை, வழக்கறிஞர் மீதான புகாரின் மீது மாவட்ட நீதிபதியோ, உச்சநீதிமன்ற நீதிபதிகளோ, வழக்கறிஞர் தொழில் செய்வதிலிருந்து சஸ்பெண்ட் செய்ய அல்லது நிரந்தரமாக நீக்க உத்தரவு இடலாம். அதன் மீது அப்பீல் செய்யமுடியாது. வழக்கறிஞர் சட்ட நடைமுறையின் படி பார் கவுன்சில் மட்டுமே வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும் , அந்த அதிகாரத்தை நீதிபதிகள் பறித்துக்கொள்கின்றனர். போன்ற வாசகங்கள் அச்சிடப்பட்டிருந்தன.
 
செய்தி மற்றும் படங்கள்:
நிருபர் ஐ.எம் ராஜா, பட்டுக்கோட்டை

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...