Pages

Tuesday, August 16, 2016

அதிரை பேரூராட்சி பொதுநிதியை அனைத்து வார்டுகளுக்கும் பகிர்ந்தளிக்க வலியுறுத்தி கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம் !

அதிராம்பட்டினம், ஆகஸ்ட் 16
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பேரூராட்சி பொதுநிதியை அனைத்து வார்டுகளுக்கு பகிர்ந்தளிக்க வலியுறுத்தி அதிராம்பட்டினம் பேரூராட்சி அலுவலகத்தில் கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.

அதிராம்பட்டினம் பேரூராட்சி உள்ளாட்சி பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் பதவிகாலம் எதிர்வரும் அக்டோபர் மாதத்துடன் முடிவடைய உள்ளது. இதையொட்டி அதிரை பேரூராட்சி இருப்பில் உள்ள பொதுநிதியில் இருந்து 21 வார்டுகளுக்கும் தலா ரூ 5 லட்சம் மதிப்பீட்டில் சாலை மற்றும் வடிகால் வசதிகள் ஏற்படுத்த அதிரை பேரூர் நிர்வாகம் சார்பில் திட்ட வரைவு தீட்டப்பட்டு மேலதிகாரிகளின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

இதில் அதிராம்பட்டினம் பழைய போஸ்ட் ஆபீஸ் சாலை - பேருந்து  நிலையம் வடிகால் அமைத்தல், பேருந்து நிலையம் மேம்படுத்துதல் உட்பட 12 வார்டுகளுக்கு மொத்தம் ரூ 57.25 லட்சம் மதிப்பீட்டில் பணிகளை தொடங்க பேரூராட்சி உதவி இயக்குனரின் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அதிராம்பட்டினம் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் முஹம்மது சரீப் ( 14 வது வார்டு ), முஹம்மது யூசுப் ( 16 வது வார்டு உறுப்பினரின் கணவர் ), ஹாஜா முகைதீன் ( 8 வது வார்டு  ), முஹம்மது இப்ராஹீம் ( 21 வது வார்டு ), செய்யது முஹம்மது ( 12 வது வார்டு  ) ஆகியோர் தங்களது வார்டுகள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக கூறி பேரூராட்சி அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.

அப்போது, அதிராம்பட்டினம் பேரூராட்சி பொதுநிதியை அனைத்து வார்டுகளுக்கு பகிர்ந்து அளிக்கவும், வார்டுகள் புறக்கணிப்பை கண்டித்து கவுன்சிலர்கள் கோஷங்கள் இட்டனர். பிற்பகல் 12 மணி முதல் நடந்த உள்ளிருப்பு போராட்டம் மாலை 5 மணி வரை நடந்தது. இதனால் இப்பகுதியில் பெரும் பரபரப்பு கூடியது.

இதுதொடர்பாக அதிராம்பட்டினம் பேரூராட்சி செயல் அலுவலர் முனியசாமி ( பொறுப்பு ) அலைப்பேசியில் தொடர்பு கொண்டு கேட்ட போது, 'அதிராம்பட்டினம் பேரூராட்சி வார்டுகள் திட்ட பணிகளின் வரைவு ஒப்புதலுக்காக மேலதிகாரிக்கு அனுப்பட்டுள்ளது' என்றார்.

இதுதொடர்பாக பேரூராட்சி உதவி இயக்குனரை அலைப்பேசியில் தொடர்பு கொண்டு கேட்டபோது, அதிராம்பட்டினம் பேரூராட்சியிடம் இருந்து கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு திட்டப் பணிகள் தொடர்பாக கோரிக்கை வந்துள்ளது. பரிசிலனை செய்யப்படும்' என்றார்.
 

3 comments:

  1. இதுவரைக்கும் நிதி ஒதுக்கப்பட்டா இல்லை

    ReplyDelete
  2. அடுத்து உண்ணாவிரதம் நடத்த விரைவில் ஆலோசனை

    ReplyDelete
  3. வி ரைவில் உண்ணாவிரடம் நடத்தப்படும்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...