Pages

Friday, August 12, 2016

அதிராம்பட்டினம் பேரூராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட மமக ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு !

அதிராம்பட்டினம், ஆகஸ்ட் 12
மனிதநேய மக்கள் கட்சி அதிராம்பட்டினம் கிளை சார்பில் இன்று இரவு நடைபெற்ற நிர்வாகிகள் - உறுப்பினர்கள் ஆலோசனைக்கூட்டத்தில் எதிர்வரும் உள்ளாட்சி தேர்தலில் அதிராம்பட்டினம் பேரூராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளரை நிறுத்துவது என முடிவு செய்யப்பட்டது.

கூட்டத்திற்கு மனிதநேய மக்கள் கட்சி அதிராம்பட்டினம் செயலாளர் ஹாலித் தலைமை வகித்து அனைவரையும் வரவேற்றார். தமுமுக தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் அதிரை அஹமது ஹாஜா முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சி அதிராம்பட்டினம் பேரூர் செயலாளராக எஸ்.ஏ இத்ரீஸ் அஹமது ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

எதிர்வரும் உள்ளாட்சி தேர்தலில் சாதக - பாதகங்களை அலசி ஆராய்ந்து அதிராம்பட்டினம் பேரூராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட மனிதநேய மக்கள் கட்சி சார்பில் வேட்பாளரை நிறுத்துவது என முடிவு செய்யப்பட்டது.

மேலும் மனிதநேய மக்கள் கட்சி புதிய உறுப்பினர்கள் சேர்க்கையை அதிகப்படுத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் மமக அதிரை பேரூர் செயலாளர் எஸ்.ஏ இத்ரீஸ் அஹமது நன்றி கூறினார். இந்த கூட்டத்தில் மமக கட்சியினர் பலர் கலந்துகொண்டனர்.

7 comments:

  1. நல்ல முடிவு.. இப்படியே ஒவ்வொரு அமைப்பும் தங்கள் நபரை பேரூராட்சி தலைவர் பதவிக்கு நிறுத்தினால் ஊருக்கு " ஏழரை " ஆரம்பித்து விடும். பேரூராட்சி நிறுவாகத்தால் மக்களின் அடிப்படை தேவைகள் பூர்த்தியடையவில்லை என்பதை நாம் மறுக்க முடியாது அதே நேரத்தில் பன்முனை போட்டி ஊருக்கு நல்லது அல்ல. அரசியல் - அமைப்பு சாரதா., மக்கள் உணர்வுகளை புரிந்து செயலாற்றும் நபரை மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. MMK. 1000. dmk 1500. Admk. 1300. Muslim look 1000. Thameem An sari team. 350. Sdpi. 1000. All muslim vote. Bjp. 2000. Conform. Chairman

    ReplyDelete
  4. ஊர் நலன் கருதி நல்லவருக்கு உறுதுணையாக இருங்கள்

    ReplyDelete
  5. ஊர் நலன் கருதி நல்லவருக்கு உறுதுணையாக இருங்கள்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...