Pages

Monday, August 15, 2016

இமாம் ஷாஃபி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் சுதந்திர தின விழா !

அதிராம்பட்டினம், ஆகஸ்ட் 15
இந்தியாவின் 70 வது சுதந்திர தினம் நாடெங்கிலும் இன்று உற்சாகமாகக் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சார்பில் சுதந்திர தின விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

விழாவிற்கு இமாம் ஷாஃபி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மூத்த முதல்வர் பேராசிரியர் பர்கத் தலைமை வகித்து இந்திய தேசிய கொடியை ஏற்றி வைத்தார். பள்ளியின் முதல்வர் திருமதி மீனாகுமாரி சுதந்திர தின உரை நிகழ்த்தினார்.

முன்னதாக பள்ளி ஆசிரியர் விஜயராஜ் அனைவரையும் வரவேற்றார். விழா முடிவில் பள்ளி ஆசிரியை முத்தமிழ் செல்வி நன்றி கூறினார். நிகழ்ச்சிகள் அனைத்தையும் பள்ளி ஆசிரியை ஜெயபிரியா தொகுத்து வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் பெற்றோர் ஆசிரியர் கழகப் பொறுப்பாளர்கள் சிபஹத்துல்லா, முஹம்மது சலீம், பள்ளி ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள், பள்ளி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.
 
 
 
 
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...