Pages

Sunday, August 14, 2016

அமீரகத்தில் மீண்டும் தகிக்கத் துவங்கும் வெப்பம் !

அதிரை நியூஸ்:
துபாய், ஆகஸ்ட் 14
அமீரக தேசிய வானிலை மையத்கின் அறிக்கையின் படி, கடந்த வாரம் சற்றுத் தணிந்திருந்த சூடான சீதோஷ்ண நிலை எதிர்வரும் நாட்களில் ஓரிரு டிகிரி அதிகரிப்பதுடன் மங்கலான வானிலையும் நிலவும்.

பொதுவாக மாலை வேளைகளில் மேக மூட்டத்துடன் காணப்படும் அதேவேளையில் கிழக்கு அமீரக பகுதிகளில் மழை பெய்யக்கூடும்.

அபுதாபியிலும் துபாயிலும் இன்றும் (ஞாயிறு) நாளையும் (திங்கள்) குறைந்தபட்சம் 32 டிகிரியும் அதிகபட்சமாக 44 டிகிரியும் நிலவும் சூடு அடுத்தடுத்த நாட்களில் 46 டிகிரி வரை எகிறும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம் அபுதாபி மற்றும் துபாயின் கடற்கரையை ஒட்டியுள்ள பகுதிகளில் 'புழுக்கம்' அதிகரிக்கும்.

அபுதாபியில் 58 சதவிகிதம் முதல் 81 சதவிகிதம் வரை நிலவும் ஈரப்பதம் எனும் புழுக்கம் துபாயில் சற்று குறைந்து 26 சதவிகிதம் முதல் 79 சதவிகிதம் வரை நிலவும்.

கிழக்குப் பிரதேசமான அல் அய்ன் நகரில் இன்றும் நாளையும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படும் அதேவேளை ஃபுஜைரா பிராந்தியம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: 7 Days
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...