Pages

Saturday, August 13, 2016

மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனு அளிக்க பேச இயலாத - காது கேளாதோர் நல சங்க உறுப்பினர்கள் கூட்டத்தில் முடிவு !

அதிராம்பட்டினம், ஆகஸ்ட் 12
அதிரையில் வாழும் மாற்றுத்திறனாளிகள் பேச இயலாத - காது கேளாதோர் நல சங்க உறுப்பினர்களின் கூட்டம் சங்க அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

கூட்டத்திற்கு நல சங்க தலைவர் சாகுல் ஹமீது தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக சேக்கனா நிஜாம் கலந்துகொண்டு ஆலோசனைகளை வழங்கினார்.

இதில் பேச இயலாத - காது கேளாத மாற்றுத்திறனாளிகளுக்கு மாத உதவி தொகை ரூபாய் 2 ஆயிரம் உயர்த்தி வழங்க வேண்டும், தொழில் தொடங்க வங்கி கடன் உதவி, இலவச வீட்டு மனை பட்டா, வாகன ஓட்டுனர் உரிமம், இலவச பஸ் பாஸ் ஆகியன வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இது தொடர்பாக எதிர்வரும் [ 22-08-2016 ] அன்று திங்கட்கிழமை காலை தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் திரு. ஆ அண்ணாதுரை அவர்களை சந்தித்து கோரிக்கை மனு அளிப்பது என முடிவு செய்யப்பட்டது.

கூட்டத்தில் துணைத்தலைவர் ஹாஜா ஷரீப், பொதுச்செயலாளர் சிராஜுதீன், இணைச்செயலாளர் உமர் தம்பி, பொருளாளர் ஜெஹபர் சாதிக் உட்பட நல சங்க உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...