Pages

Thursday, August 11, 2016

ஷார்ஜா – துபாய் இடையே புதிய போக்குவரத்து இணைப்புச் சாலை திறப்பு

அதிரை நியூஸ், ஆகஸ்ட் 11
அமீரகத்தில் மிகவும் மோசமான போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகள் என ஷார்ஜா - துபாய் சாலைகளை கண்ணை மூடிக்கொண்டு கூட எந்த ஓட்டுனரும், பயணியும் சொல்வர்.

ஷார்ஜா – துபாய் இடையே தினமும் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கான ஒரு முயற்சியாக 49 மில்லியன் திர்ஹம் செலவில் 3 கி.மீ தூரத்திற்கு 7.3 புதிய மீட்டர் அகலமுடைய இருவழி காங்க்ரீட் சாலை நேஷனல் பெயின்ட்ஸ் மேம்பாலம் அருகில் கட்டப்பட்டு இன்று முதல் வாகனப் பயன்பாட்டிற்கு திறந்துவிடப்பட்டது.

ஷார்ஜா பல்கலைகழகம் எதிரில் உள்ள ஷார்ஜா ஆங்கிலப் பள்ளி பின்பக்க சாலையில் வாகனத்தை செலுத்தினால் மலிஹா சாலையிலுள்ள அவுத் ருக்கன் மேம்பாலம் வழியாக சென்று முஹமது பின் ஜாயித் தேசிய நெடுஞ்சாலையை எளிதாக சென்றடையலாம் என SRTA விளக்கமளித்துள்ளது.

இதன்மூலம் இன்டஸ்ட்ரியல் ஏரியா 15 மற்றும் 17 ஆகிய பகுதிகளில் ஏற்படும் கடும் போக்குவரத்து நெரிசல் குறையுமென்று எதிர்பார்க்கப்படுவதாக ஷார்ஜா சாலை மற்றும் போக்குவரத்துத் துறை (SRTA) தலைவரும் பொறியாளருமான யூசுப் ஸாலேஹ் அல் சுவைஜி தெரிவித்தார்.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...