Pages

Monday, August 15, 2016

அதிரையில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் சுதந்திர தின விழாக் கொண்டாட்டம் !

அதிராம்பட்டினம், ஆகஸ்ட் 15
இந்தியாவின் 70 வது சுதந்திர தினம் நாடெங்கிலும் இன்று உற்சாகமாகக் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தில் எஸ்டிபிஐ கட்சியினர் சார்பில் சுதந்திர தின விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

விழாவிற்கு எஸ்டிபிஐ கட்சி அதிராம்பட்டினம் துணை தலைவர் நடராஜ் தலைமை வகித்தார். எஸ்டிபிஐ கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் அப்துல் ரஹ்மான் இந்திய தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.

விழாவில் கேம்பஸ் டுடே பத்திரிகை ஆசிரியர் குழு உறுப்பினர் வழக்கறிஞர் முஹம்மது தம்பி சுதந்திர தின உரை நிகழ்த்தினார்.

முன்னதாக எஸ்டிபிஐ கட்சி அதிராம்பட்டினம் நகர தலைவர் அஜார் அனைவரையும் வரவேற்று முடிவில் நன்றி கூறினார்.

இந்நிகழ்ச்சியில் எஸ்டிபிஐ கட்சியினர், ஊர் பிரமுகர்கள், பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர். அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.
 
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...