Pages

Thursday, August 11, 2016

'தினமணி' செய்தி எதிரொலி: துப்புரவுப் பணியாளர்கள் சம்பள பாக்கியை வழங்க பேரூராட்சி நிர்வாகம் முடிவு !

அதிராம்பட்டினம், ஆகஸ்ட் 11
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பேரூராட்சி பகுதியில் உள்ள 1 முதல் 21 வார்டுகளில் குவியும் குப்பை கூளங்கள், கழிவுகளை அதிராம்பட்டினம் பேரூராட்சி துப்புரவுப் பணியாளர்கள் அப்புறப்படுத்தி வருகின்றனர். இதில் நிரந்தர ஊழியர்கள் 21 பேர்களும், ஒப்பந்த அடிப்படையில் தற்காலிக ஊழியர்கள் 54 பேர்களும் பணியாற்றுகின்றனர். இவர்கள் இரு வேறு குழுக்களாக பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு ஊதியமாக நாள் ஒன்றுக்கு ரூ. 230 வீதம் மாதந்தோறும் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் பணியாற்றிய ஊழியர்கள் சம்பளத்தில் 4 நாட்கள் பிடித்தம் செய்துகொண்டு ஊதியம் வழங்கியதால் அதிருப்தி அடைந்த தற்காலிக ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள் நேற்று காலை முதல் பணி நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் அதிராம்பட்டினம் பகுதியில் குப்பைகள் தேங்கி கிடந்தது. இதுதொடர்பாக அதிரை பேரூராட்சி பெருந்தலைவர் எஸ்.எச் அஸ்லம் அவர்களை நேரில் சந்தித்து கோரிக்கை வைத்தனர்.

இதுதொடர்பாக இன்று காலை தினமணி நாளிதழில் செய்தி பிரசுரமாகியது. இதையடுத்து பேரூராட்சி நிர்வாகத்தால் பிடித்தம் செய்த 4 நாட்கள் சம்பள பாக்கியை வழங்க முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட ஒப்பந்த துப்புரவுப் பணியாளர்கள் இன்று மதியம் பணிக்கு திரும்பினர். பணி நிறுத்தம் செய்தியை சம்பந்தப்பட்டோரின் கவனத்திற்கு எடுத்துச்சென்று, கோரிக்கை நிறைவேற உதவிய தினமணி நாளிதழுக்கு ஒப்பந்த துப்புரவுப் பணியாளர்கள் நன்றி தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...