Pages

Friday, August 5, 2016

தேங்காய் விலை உயர்த்த கோரி தென்னை விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!

பட்டுக்கோட்டை, ஆகஸ்ட் 05
பட்டுக்கோட்டை தலைமை தபால் நிலையம் அருகில் தென்னை விவசாயிகள் சங்க மாவட்ட அமைப்பாளர் கோவிந்தசாமி தலைமையில் தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்கத்தினர் கூடி தேங்காய் விலையினை உயர்த்திட கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டத்தில் சோமசுந்தரம், சிதம்பரம், பாலசுப்ரமணியம், வேதாசலம், வீரப்பன், சக்திவேல், நாராயணசாமி, மற்றும் ராமசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர், தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்க முன்னால் அமைப்பாளர் பழனிவேல் விளக்கஉரையாற்றினார். பட்டுக்கோட்டை ஒன்றிய செயலாளர் செல்வம், மதுக்கூர் ஒன்றிய செயலாளர் காசிநாதன் உள்பட தென்னை விவசாயிகள் 100க்கும் மேற்பட்டர்வர்கள் கல ந்துகொண்டனர். ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தேங்காய் விலை வீழ்ச்சியினை கண்டித்து தேங்காய்களை நடு ரோட்டில் போட்டு உடைத்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.

மேலும் ஆர்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் உரித்த தேங்காயினை கேரளாவை போல கிலோ 25 ரூபாய் வீதம் அரசே கொள்முதல் செய்ய வேண்டும். கொப்பரை விலையினை குறைந்த பட்சம் கிலோ ஒன்றிற்கு 100 ரூபாய் என நிர்ணயம் செய்ய வேண்டும். கொப்பரை கொள்முதல் செய்ய அரசு ஒதுக்கிய 20 கோடி போதுமானதல்ல. ஆகவே தேவைக்கேற்ப தொகையினை அதிகப்படுத்த வேண்டும். தேவைக்கு அதிகமாக பாமாயில் உள்ளிட்ட எண்ணெய் வகைகளை கொள்முதல் செய்வதை நிறுத்த வேண்டும் , தேங்காய் சம்பந்தப்பட்ட மதிப்புக்கூட்டு பொருட்களை ஏற்றுமதி செய்ய உள்ள ஒப்பந்தத்தை புதுப்பித்து அல்லது புதிய ஒப்பந்தத்தை ஏற்படுத்திட வேண்டும். அரச பள்ளிகளில் போடப்படும் மதிய உணவிற்கு தேங்காயினை பயண்படுத்திடவும், அரசு அங்காடிகளில் தேங்காய் எண்ணையினை விற்கவும் ஏற்பாடு செய்திட வேண்டும். கொப்பரை தயாரிக்க போதுமான பயிற்சி மற்றும் உபகரணங்கள் கிடையாது அதனால் ஒன்றியத்திற்கு ஒரு கொப்பரை தயாரிக்கும் நிலையம் அமைத்திடநடவடிக்கை எடுத்திட வேண்டும். இயற்கை இடர்பாடுகளில் சேதமடைந்த தென்னை விவசாயிகளுக்கு தென்னை ஒன்றிற்கு இரண்டாயிரம் ரூபாய் இழப்பீடு வழங்கிட வேண்டும். தென்னை விவசாயிகளுக்கான அடையாள அட்டை பெறுவதை எளிமை படுத்த வேண்டும், கொச்சின் போர்டு மூலம் தென்னை விவசாயிகளுக்கு கிடைக்கும் சலுகைகள் அனைத்தும் பாரபட்சமின்றி அனைத்துவிவசாயிகளுக்கும் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் போன்ற கோரிக்கைகள் முன்வைத்து ஆர்பாட்டம் நடத்தப்பட்டன. முடிவில் பட்டுக்கோட்டை நகர செயலாளர் கந்தசாமி நன்றி கூறினார்.
 
 
 
செய்தி மற்றும் படங்கள்:
'நிருபர்' ஐ.எம் ராஜா, பட்டுக்கோட்டை

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...