Pages

Friday, August 12, 2016

மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் !

தஞ்சாவூரில் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் நடைபெற்ற 18 வயதிற்குட்பட்ட மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு 3ம் நாள் முகாமினை மாவட்ட ஆட்சியர் திரு.ஆ.அண்ணாதுரை அவர்கள் பார்வையிட்டார்.

அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் 18 வயதிற்குட்பட்ட மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் 10.08.2016 முதல் தொடங்கி 20.08.2016 வரை நடைபெறுகின்றது.  இன்று (12.08.2016) தஞ்சாவூர் தூய அந்தோணியார் மேல்நிலைப் பள்ளி, அன்பு இல்லத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் நடைபெற்றதை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் பார்வையிட்டு சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தார்.

இம்முகாமில் 18 வயதிற்குட்பட்ட மாற்றுத் திறனாளிகள் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, இலவச காதொலி கருவி, மூன்று சக்கர வண்டி, சக்கர நாற்காலி, நடக்க உதவும் ரோலேட்டர்கள், கை மற்றும் கால்களுக்கான காலிப்பர்கள் ஆகியவை தேவைப்படுவோர் முகாமில் பங்கு கொண்டு எவ்வித கட்டணமின்றி தங்களுக்குரிய உபகரணங்களை பெற்றுக் கொண்டனர்.

இம்முகாம் தொடர்ச்சியாக 13.08.2016 அன்று ஆரம்ப சுகாதார நிலையம் அம்மாப்பேட்டையிலும், அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மதுக்கூரிலும், 16.08.2016 அன்று ஆரம்ப சுகாதார நிலையம், பூதலூரிலும், 17.08.2016 அன்று ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, திருவோணத்திலும், அரசு மருத்துவமனை, திருவையாற்றிலும், 18.08.2016 அன்று ஆரம்ப சுகாதார நிலையம், திருப்பனந்தாளிலும், 19.08.2016 அன்று ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, வல்லம் கிழக்கிலும், 20.08.2016 அன்று அரசு மருத்துவமனை, ஒரத்தநாட்டிலும் மற்றும் பாபநாசத்திலும் நடைபெறும்.

பின்னர், மூன்று மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு சக்கர நாற்காலியினை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.ஆ.அண்ணாதுரை அவர்கள் வழங்கினார்.

இம்முகாமில் மாவட்ட கல்வி அலுவலர் திருமதி.திருவளர்செல்வி, மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் திரு.ரவிச்சந்திரன், மாவட்ட இடைநிலை கல்வி ஒருங்கிணைப்பாளர் திரு.அசோக், மற்றும் ஏராளமான மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...