Pages

Saturday, August 13, 2016

சுதந்திர தினத்தையொட்டி தஞ்சை விமானப் படை நிலையத்தில் விமானக் கண்காட்சி ! [ படங்கள் ]

இந்திய சுதந்திர தினா விழா நாளை மறுதினம் நாடெங்கிலும் வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தஞ்சாவூரில் உள்ள இந்திய விமானப் படை நிலையத்தில் விமானக் கண்காட்சி இன்று நடைபெற்றது.

சுதந்திர தின விழாவை முன்னிட்டு, தஞ்சாவூர் விமானப் படை நிலையத்தில் உங்கள் படையை அறிந்து கொள்ளுங்கள் என்ற தலைப்பில் விமானக் கண்காட்சி இன்று நடைபெற்றது. இதில், இந்திய விமானப் படையின் முன்னணி விமானங்கள், இதர ஆயுதங்கள் காட்சிப்படுத்தப்பட்டன.

கண்காட்சியை தஞ்சை விமானப்படை தள அதிகாரியாக தளபதி விக்ரம் ஜீட் சிங் தொங்கி வைத்தார். இந்திய விமானப் படை குறித்த தகவல்களையும், அதில் உள்ள வேலைவாய்ப்புகளையும் இளைஞர்கள் அறிந்து கொள்வதற்காக இக்கண்காட்சி நடத்தப்பட்டது. மேலும், படையில் சேருவதற்கு இளைஞர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதும், ஊக்கப்படுத்துவதுமே இக்கண்காட்சியின் நோக்கம். இக்கண்காட்சியை பள்ளி, கல்லூரி மாணவர்கள் பார்வையிட்டனர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...