Pages

Saturday, August 27, 2016

அதிராம்பட்டினம் அல் ஹிக்மா மகளிர் இஸ்லாமியக் கல்வியக பட்டமளிப்பு விழா!

அதிராம்பட்டினம், ஆகஸ்ட் 27
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அல் ஹிக்மா மகளிர் இஸ்லாமியக் கல்வியகம் முதலாம் ஆண்டு பட்டமளிப்பு விழா நேற்று வெள்ளிக்கிழமை ஆயிஷா மகளிர் அரங்கில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிராம்பட்டினம் கிளை-2 தலைவர் ஃபஜால் முகைதீன் தலைமை வகித்தார்.

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக டிஎன்டிஜே மாநிலத் தலைவர் பக்கீர் முஹம்மது அல்தாஃபி கலந்து கொண்டு மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கி உரை நிகழ்த்தினார். இதில் 11 மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் அல் ஹிக்மா மகளிர் இஸ்லாமியக் கல்வியகம் முதல்வர், அஸ்ரப்தீன் பிர்தவ்ஸி, டிஎன்டிஜே தஞ்சை மாவட்டத் தலைவர் முஜீபுர் ரஹ்மான் ஆகியோர் உரை நிகழ்த்தினார்கள். முடிவில் டிஎன்டிஜே மாவட்ட பொருளாளர் வல்லம் ஜாஃபர் நன்றி கூறினார்.

நிகழ்ச்சி ஏற்பாட்டினை அல் ஹிக்மா மகளிர் இஸ்லாமியக் கல்வியக நிர்வாகத்தினர் செய்து இருந்தனர். இதில் அல் ஹிக்மா மகளிர் இஸ்லாமியக் கல்வியக ஆசிரியைகள், மாணவிகள், பெற்றோர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...