Pages

Saturday, September 3, 2016

அரபு நாடுகளிலும், கிழக்காசிய நாடுகளின் செப். 12 அன்று ஹஜ் பெருநாள் !

அதிரை நியூஸ்:
துபாய், செப். 03
சவுதி அரேபியாவின் உச்சநீதி மன்றம் அறிவித்துள்ளபடி, பிறை பார்க்கப்பட வேண்டிய நாளான துல்காயிதா 29 பின்னேரம் (செப்டம்பர் 1) அன்று உலகில் எங்கும் பிறை தென்படாததால் துல்காயிதா மாதம் நபிவழியின் அடிப்படையில் 30 நாட்களாக கணக்கிடப்பட்டு, துல்ஹஜ் பிறை 1 என்று செப்டம்பர் 3 ஆம் தேதி முதல் கணக்கிடப்படுகிறது. இந்த அறிவிப்பை அனைத்து அரபு நாடுகளும் ஏற்றுக் கொண்டுள்ளன.

மேலும் அமெரிக்காவிற்கான பிக்ஹ் கவுன்சில் (U.S. Figh Council) சவுதி அரேபியாவின் உச்சநீதிமன்ற அறிவிப்பை ஏற்று செப்டம்பர் 12 ஆம் தேதி ஈதுல் அத்ஹா எனும் 'தியாகத் திருநாள்;' வட அமெரிக்க நாடுகளில் (North American Countries) கொண்டாடப்படும் என அறிவித்துள்ளது.

சவுதியின் பிறை அறிவித்தலுக்கு முன்பே கிழக்கு மற்றும் தென் கிழக்காசிய நாடுகளான மலேஷியா, இந்தோனேஷியா, புருணை, ஜப்பான் மற்றும் துருக்கி (Europe) போன்ற நாடுகள் பிறை தென்படாத காரணத்தால் செப். 12 அன்று தான் ஹஜ்ஜூப் பெருநாள் என அறிவித்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

தங்கள் பகுதிகளில் பிறை பார்த்தலின் அடிப்படையில், இந்தியா, பாகிஸ்தான் போன்ற ஆசிய நாடுகளில் செப்.13 அன்று தான் ஹஜ்ஜூப் பெருநாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Source: Gulf News & 7 Days
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...