Pages

Thursday, September 1, 2016

ஹஜ் செய்திகள்: புனிதத் தலங்களில் 24 மணிநேர அவசர மருத்துவ உதவிகள் !

அதிரை நியூஸ்:
சவூதி அரேபியா, செப். 01
இந்த வருடமும் ஹஜ் கிரிகைகளை யாத்ரீகர் கடும் வெயில் காலத்தில் மேற்கொள்ள வேண்டிய நிலையில் உள்ளதால் யாத்ரீகர்கள் வெயிலாலும் வெப்பத்தினால் ஏற்படும் மயக்கத்தாலும் பாதிக்கப்படக்கூடும். எனவே, ஹஜ் அமைச்சகம் 24 மணிநேர அவசரகால உதவிகளுக்கு தேவையான முன்னேற்பாடுகளை புனிதத் தலங்களான மக்கா, மதினா, மினா, ஜமாரத், முஜ்தலிபா, அரபாத் ஆகிய இடங்களில் தேர்ச்சி பெற்ற மருத்துவக் குழுவைக் கொண்டும் எற்பாடு செய்துள்ளது.

மேலும், மினா அல் வாதி மருத்துவ மையத்திற்கு இணையாக பெரிய குளிரூட்டப்பட்ட டிரக்குகளிலும் அவசரகால மருந்துகள் ஏற்றப்பட்டு ஹரம் ஷரீஃப், ஜமாரத் பாலம் மற்றும் அரபாத் ஆகிய 3 இடங்களில் தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருக்கும்.

208 கூடுதல் காற்றோட்ட மின்விசிறிகள் அமைக்கப்பட்டுள்ளன. அரபாத், மினாவில் 4 சிறப்பு மருத்துவமனைகளுடன் 80 ஆரம்ப சுகாதார நிலையங்களும் மினா, முஜ்தலிபா, அரபாத் பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 22 ஆயிரம் மருத்துவ துறை சம்பந்தப்பட்ட ஊழியர்களுடன் 400 ஸ்பெஷலிஸ்ட் டாக்டர்களும் களமிறக்கப்பட்டுள்ளனர் என இன்னும் பல ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

Source: Arab News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...