Pages

Sunday, September 4, 2016

அதிராம்பட்டினத்தில் நடந்த இந்திய கம்யூனிஸ்ட் ஆலோசனைக்கூட்டத்தில் 38 பேர் புதிதாக இணைந்தனர்

 
அதிராம்பட்டினம் செப்.04
தஞ்சாவூர், அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற கிராமப் பகுதிகளை சேர்ந்த 38 பேர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் புதிதாக இணைந்தனர்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அதிராம்பட்டினம் பேரூர் நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் இன்று மாலை கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அதிராம்பட்டினம் பேரூர் செயலாளர் காளிதாஸ் தலைமை வகித்தார். துணைச் செயலாளர் எம்எல்ஏ ஹசன் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற கிராமப் பகுதிகளை சேர்ந்த பெண்கள் 25 பேர் உட்பட மொத்தம் 38 பேர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் புதிதாக இணைந்தனர். அதிராம்பட்டினத்தை தனிவட்டமாக அறிவிக்கவும், அதிராம்பட்டினம் பேருந்து நிலையப்பகுதியில் ரவுண்டான அமைக்கவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முன்னதாக துணைச்செயலாளர் பன்னீர் செல்வம் வரவேற்புரை ஆற்றினார். முடிவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அதிராம்பட்டினம் இளைஞர்மன்ற செயலாளர் ஹாஜா முகைதீன் நன்றி கூறினார். இதில் மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் பக்கிரிசாமி, ஒன்றிய செயலாளர் மார்க்ஸ் உள்ளிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் பலர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...