Pages

Friday, September 9, 2016

ஆலடித்தெரு பகுதியில் ரூ 4 லட்சம் மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி !

அதிராம்பட்டினம், செப். 09
தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் பேரூராட்சி 21 வது வார்டுக்கு உட்பட்ட ஆலடித்தெரு குடியிருப்பு பகுதியில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணியை அதிராம்பட்டினம் பேரூராட்சி 21 வது வார்டு கவுன்சிலர் முகம்மது இப்ராகிம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அதிராம்பட்டினம் பேரூராட்சி 21 வது வார்டு ஆலடித்தெரு குடியிருப்பு பகுதியில் அதிராம்பட்டினம் பேரூராட்சி பொதுநிதி ரூ. 4 லட்சம் மதிப்பீட்டில் 90 மீட்டர் நீளத்தில் காங்கிரட் மூடியுடன் கூடிய மழைநீர் வடிகால் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதன் பணிகளை அதிராம்பட்டினம் பேரூராட்சி 21 வது வார்டு கவுன்சிலர் முகம்மது இப்ராகிம் இன்று மாலை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதுகுறித்து கவுன்சிலர் முகம்மது இப்ராகிம் நம்மிடம் கூறுகையில்; 
அதிரை பேரூராட்சியின் 21 வது வார்டு பகுதிக்கு உட்பட்ட ஆலடித் தெரு குடியிருப்பு பகுதியில் உள்ள கழிவு நீர் வடிகால் தூர்ந்து போயுள்ளது. இதனால் இப்பகுதி குடியிருப்புகளில் வெளியேறும் கழிவு நீர் சாலைகளில் தேங்கி காணப்பட்டது. இதனால் துர் நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்படுத்தி வந்தது.

இதையடுத்து அதிரை பேரூராட்சி பொதுநிதி ரூ. 4 லட்சம் மதிப்பீட்டில் 90 மீட்டர் நீளத்தில் காங்கிரட் மூடியுடன் கூடிய வடிகால் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதன் பணிகள் சில வாரங்களில் நிறைவுபெரும். இதன் மூலம் இப்பகுதி குடியிருப்புவாசிகள் பயன் பெறுவர்' என்றார்.
 
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...