Pages

Tuesday, September 20, 2016

40 சதவீதம் ஊனம் இருந்தால் உதவித்தொகை: கிடப்பில் போடப்பட்ட தமிழக அரசின் அரசாணையை அமல்படுத்தக்கோரி மாற்றுத்திறனாளி பேரவைக்கூட்டத்தில் தீர்மானம் !

பட்டுக்கோட்டை, செப்-20
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையில் தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளி மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் ஒன்றியப் பேரவை கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்திற்கு அதிரை பஹத் முகமது தலைமை வகித்தார். பேராவூரணி ஒன்றிய செயலர் லாரன்ஸ் சேவியர், பாலசுப்பிரமணியம், பார்த்தசாரதி, செந்தில் குமார், ஆரோக்கியதாஸ், யாகூப், காது கேளாத - வாய் பேசாத நலச் சங்கம் தலைவர் சாகுல் ஹமீது, பாண்டிதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

டி. செந்தில் குமார் வரவேற்றார். மாநில பொதுசெயலாளர் நம்பு ராஜன் சிறப்புரை ஆற்றினார்.பட்டுக்கோட்டை ஒன்றிய செயலாளர் கிருஷ்ண மூர்த்தி அறிக்கை சமர்பித்தார். தலைவர் முஹம்மது ராவூத்தர் தீர்மானங்கள் வாசித்தார்.

கூட்டத்தில் கீழ் கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது:
1. பாராஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் பெற்று இந்தியாவுக்கு பெருமை தேடித்தந்த மாரியப்பனுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

2. தமிழகம் முழுவதும் மாற்றுத்திறனாளிகளின் முழு விவரத்தை இணையம் மூலம் தொகுத்து முழுமையான கணக்கெடுப்பை நடந்த வேண்டும்.

மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை வழங்குவதற்கான ஊனத்தின் சதவீதத்தை 60%-லிருந்து 40% சதவீதமாக குறைப்பதாகவும், வேலை இல்லாமல் இருக்கும் அனைத்து மாற்றுத்திறனாளிகளும் வேறு நிபந்தனை ஏதுமின்றி உதவித்தொகை பெறத்தக்க வகையில் விதிகளை தளர்த்துவதாகவும் அறிவிப்பில் தெரிவித்தார்.  முதலமைச்சரின் அறிவிப்பை தொடர்ந்து இரண்டே நாட்களில் பிப்.22 தேதியிட்டு அரசாணை எண்.27 வெளியிடப்பட்டது. 7 மாத காலமாகியும் அமலாகவில்லை
இந்த அரசாணை வெளியாகி 7 மாதம் நிறைவடைந்துவிட்டது. கிடப்பில் போடப்பட்டுள்ளதை செயல்படுத்த வேண்டும்.

3. மாதம் ஒரு முறை மாநில, மாவட்ட அளவில் குறைதீர்க்கும் கூட்டம் நடத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

4. மாற்றுத்திறனாளிகளின் வாகனத்தை வருவாய் போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு செய்வதில் உள்ள கடும் விதிமுறைகளை தளர்த்தி, மாற்றுத்திறனளிகளுக்கு ஓட்டுனர் உரிமம் வழங்க வேண்டும்.

மாவட்ட செயலர் இளங்கோவன், மாவட்ட பொருளாளர் ஜமால் முஹம்மது, சேதுபாவசத்திரம் ஒன்றிய செயலர் ஜலீல் முகைதீன், முன்னாள் மாவட்ட செயலர் ராஜசேகர் ஆகியோர் பங்கேற்றனர். கூட்ட முடிவில் பிரபாகரன் நன்றி கூறினார்.
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...